| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 327 |
வழித்தாமாதலின் அவற்றை விலக்கி, யாண்டும் எஞ்ஞான்றும் துன்பம் தீர்ந்த இன்ப வகையே உவகையாகுமென்று அதன் இயல் விளங்க “அல்லல் நீத்த உவகை” எனத் தெளிக்கப்பட்டது. புலனே என்பதன் ஏயும், ‘என்றும்’ எண்குறிப்பன. ஈற்றேகாரம், தேற்றம் அசையுமாம். | சூத்திரம் : 12 | | | | ஆங்கவை யொருபா லாக, ஒருபா லுடைமை யின்புற னடுவுநிலை யருள றன்மை யடக்கம் வரைத லன்பெனாஅ, கைம்மிக னலிதல் சூழ்ச்சி வாழ்த்த னாணுத றுஞ்ச லரற்றுக் கனவெனாஅ, முனித னினைதல் வெரூஉதன் மடிமை கருத லாராய்ச்சி விரைவுயிர்ப் பெனாஅ, கையா றிடுக்கண் பொச்சாப்புப் பொறாமை வியர்த்த லைய மிகைநடுக் கெனாஅ, விவையு முளவே யவையலங் கடையே. |
கருத்து : இதற்கு முன்வரை முதற்சூத்திரங் கூறும் “பண்ணைத்தோன்றும் எண்ணான்குணர்வின்” மெய்ப்பாட்டுவகை விரித்து, இதில் முன் இரண்டாம் சூத்திரம் சுட்டிய நாலிரண்டாகும் பாலவாய்ச் செய்யுட் பொருள் சிறக்கவரும் உள்ளுணர்வுகள் குறிக்கப்படுகின்றன. பொருள்; ஆங்கவை ஒருபாலாக ஒருபால் = இதற்குமுன் “நகையே. . . எட்டே மெய்ப்பாடென்ப” என்பது முதல் “செல்வம் புலனே. . . உவகை நான்கே” என்பது வரை சூத்திரங்களில் கூறப்பட்ட மெய்ப்பாட்டுணர்வுவகை எட்டும் ஒருபான்மையவாக, மற்றொரு பெற்றியவாய்; உடைமை. . . நடுக்கெனாஅ இவையுமுளவே = உடைமை முதல் நடுக்குவரை எவ்வெட்டாய் எண்ணப்படு முணர்வுகளும் செய்யுட்பொருள் சிறக்க வருவனவுள; அவையலங்கடையே = இவை உளவாதல் முன் குறித்த மெய்ப்பாடு எட்டன்வகை தோன்றாவிடத்தாம். குறிப்பு : இதில் கூறப்பெறும் உணர்வு முப்பத்திரண்டும் ‘எனாஅ’ எனும் அளபெடை இடைச்சொற்களால் எவ்வெட்டாய்ப் பிரித்து எண்ணப்படுதலால், இவை முதலிற் குறித்த “நானான்காய்ப் பண்ணைத் தோன்றும் மெய்ப்பாடு எட்டன்” |