| 328 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
வகைகளின் வேறாதல் வெளிப்படை. அன்றியும், நானான்காய்த் தொகுத்து முன் மெய்ப்பாட்டு வகை எட்டு எனச் சுட்டிய எண்ணான்குணர்வும் புறத்தே மெய்யிற்றோன்றுந் தன்மையவாதல், “கண்ணியபுறனே நானான்கென்ப” என முதற் சூத்திரத்தும், “அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப” எனத் தேற்றத்துடன் மூன்றாஞ் சூத்திரத்தும் வற்புறுத்தப் பெறுதலால் தெளிவாகும். அதனாலும், அப்பான்மைசுட்டி அவற்றை ஆங்கவை ஒருபாலாக எனப்பிரித்து நிறுத்தி, “ஒருபால்” என வேறு தொடங்கி எவ்வெட்டாய் வகுத்து இச்சூத்திரத் தெண்ணப்பெறும் உணர்வு முப்பத்திரண்டும்புறக்குறிச் சுட்டின்றி வாளா கூறப்பெறுதலாலும், நகை முதலிய புறக்குறிபெறும் பான்மைய எண்ணான் குணர்வின் மெய்ப்பாடு எட்டே எனக் குறித்து விலக்கியதாலும், இதில் நாலெட்டும் முன் எண்ணான்கென்ற மெய்ப்பாட்டு வகைகளின் வேறாய்ச் செய்யுட் பொருள் சிறக்கவரும் உணர்வுகளாதல் தேற்றமாகும். இப்பான்மை வேறுபாடு விளங்க, இச்சூத்திரத் துவக்கத்தில் இவ்வுணர்வுகளை எண்ணத் தொடங்குமுன் “ஆங்கவை ஒரு பாலாக, ஒருபால்” என நிறுத்த சொற்பெய்த குறிப்புமறிக. இவை புறக்குறிச்சுட்டுப் பெறாமையால் மெய்ப்பாடாகச் சிறவாவெனினும் மெய்ப்பாடுகள் போலச் செய்யுட்பொருள் சிறக்கவரும் உள்ளுணர்வுகளாதலின் இவ்வியலில் ஒப்பமுடித்துக் கூறப்பெற்றன. இனி, இவ்வாறு எண்ணான்கும் நாலெட்டுமாய் வகைபெறலொன்று, புறக்குறிச் சார்புடைமையும் இன்மையும் ஒன்று, ஆக இவ்விருதிற வேறுபாடேயுமன்றி, இவற்றிடை இன்னுமொரு தன்மை வேறுபாடுமுளது. மெய்ப்பாட்டுவகை எண்ணான்கும் அகப்புறப் பொருட் பகுதிகளிரண்டிற்கு மொப்ப வருபவை. இதிற் குறிக்கும் உணர்வுவகை நாலெட்டும் அகத்துறைகளுக்குச் சிறப்புரிமை பெறுவன. இவை எவ்வெட்டாய், முறையே “இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைபை்பாடும் பாங்கொடு தழாஅலும் தோழியிற் புணர்வு மென்றாங் கந்நால் வகையினுமடைந்த சார்பொடு” கண்ணிய நால்வகைக் கேற்பத் தொகுக்கப்பட்டுள. இனி, உடைமை என்பது பொருண்மை. அஃதாவது மதித்து உரிமைகொள்ளும் பெற்றியாகும். மதிக்கப்படுவதே பொருளாம்; “பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும்” என்பது காண்க. இனி ஒருவர் மற்றவர்க்குப் பொருளாதல் காதலின் |