பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை333

. . . . . திருமனைக் பலகடம் பூண்ட
பெருமுது பெண்டிரே மாகிய நமக்கே”

(குறுந். 181)

எனவும்,

“. . . . மான்மறி. . . . . பெருவரை நீழ லுகளும் நாடன்
கல்லினும் வலியன் தோழி!”

(குறுந். 187)

எனவும்,

“. . . . . பெருங்கனாடன், இனிய னாகலின், இனத்தினியன்ற இன்னாமையினும் இனிதோ இனிதெனப் படூஉம் புத்தே ணாடே” (குறுந். 288) எனவும், “நாடன் நயமுடையன்” அதனால் “நீப்பினும் வாடல் மறந்தன தோள்” (ஐந்திணை எழுபது செய். 2) எனவும், “பெருமலை நாடற்கியானெவன் செய்கோ என்றி; யானது நகை என உணரேனாயின், என்னாகுவைகொல் நன்னுதல் நீயே” எனவும், தலைவனைப் பழித்த தோழியை வெறுக்கும் தலைவி கூற்று வருதல் காண்க.

வியர்த்தல் = நாணாலும் நடுக்கத்தானும் வேர்த்தல். இது காதலரியல் பாதலை, “பொறிநுதல் வியர்த்தல்” என இதன்பின். . . . சூத்திரத்து வருதலானு மறிக.

“நின் பிறைநுதற் பொறிவியர்
 உறுவளியாற்றச் சிறுவரை திற”

எனவரும் அகப்பாட்டினு மிது குறிக்கப்படுதல் காண்க.

ஐயம் = காதல் மிகையாற் கடுத்தல். இது முதற்காட்சியினிகழும் ஐயமன்று; அது தெளிந்தபின் எழாதாதலின், ஈண்டு ஊடலில் எழும் ஐயஉணர்வைக் குறிக்கும்.

“கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீரென்று”; “வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று”, “தும்முச் செறுப்பவழுதாள், நுமருள்ளல் எம்மை மறைத்திரோ என்று”; என்பன போல வருவன கண்டுகொள்க.