| 338 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
எண்ணுப் பொருள்விளக்கும் (சொல். சூத். 289). ‘நான்கே’ என்பதன் ஏகாரம் இசைநிறை; அசையெனினுமமையும். ‘மொழிப’ எனும் வினைக்கு, கொண்டபொருள் தொடர்பால் ‘புலவர்’ எனும் எழுவாய் அவாய் நிலையிற் கொள்ளப்பட்டது. | சூத்திரம் : 14 | | | | கூழை விரித்தல் காதொன்று களைதல் ஊழணி தைவரல் உடைபெயர்த் துடுத்தலோ டூழி நான்கே இரண்டென மொழிப. |
கருத்து : இது முதலில் கண்டாங்கே கொண்ட காதல் வளர விளையும் விருப்பக் குறிகளை உணர்த்துகிறது. பொருள் : கூழைவிரித்தல் = (தழையுங்காதல்) தன்னுளம் நெகிழ்க்கக்) குழையுங் கூந்தலைத் திருத்தக் குலைப்பது; காதொன்று களைதல் = செவியில் பூட்டாது செறுகிய தோடு ஒன்றைத் திருத்துவாள்போலக் கழற்றுதல்; ஊழணிதைவரல் = பெண்டிர் பண்டை முறையே கொண்டணி தொடி வளைமுதலியவற்றை நழுவாது செறிப்பது போலத் தடவுவது; உடைபெயர்த்து உடுத்தலோடு = அழியுமுணர்வால் குழையுமுடலில் குலையுங் கலையின் நிலையைத் திருத்தி யணிதலுடனே; ஊழின் நான்கே இரண்டு எனமொழிப = முறையே இந்நான்கும் திரண்டெழும் அன்பின் இரண்டாங்கூறாம் எனக்கூறுவர் புலவர். குறிப்பு : இதில் கூழை, கழலுங்காதணி, ஊழணி, கலையுமுடைதிருத்தல் எல்லாம் பெண்டிர்க்குரியவாதல் வெளிப்படை. பாற்பொதுமை விலக்கக் கூழையெனப்பட்டது; பெண்டிர் கூந்தலே கூழையெனப்படுதலின், ‘ஒன்று’ என்பதை முதனிலை ஆகுபெயராக்கி, பூட்டாது காதில் பொருந்தும் அணியெனக் கொள்ளினுமமையும். “ஊழணி” என்பது, கைம்மையரல்லாக் குலமகளிர் களையாது அணியும் வளைபோல்வனவற்றைக் குறிக்கும். இன்றியமையாது இவை குடிப்பெண்டிர் கொண்டணிதல் முறையாதலின், ஊழணியென உரைக்கப்பட்டன. (ஊழ் = முறை). உடைபெயர்த்துடுத்தலில், பெயர்த்து என்பது மீட்டும் எனும் பொருளைக் குறிக்கும்; அழித்து எனக் கொள்ளுதல் அமைவுடைத்தன்று. முன் சுட்டியுள்ள ஆடை நெகிழ்வதை மீட்டும் |