| 342 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
| சூத்திரம் : 16 | | | | பாராட் டெடுத்தல், மடந்தப வுரைத்தல், ஈரமில் கூற்ற மேற்றலர் நாணல், கொடுப்பவை கோடல் உளப்படத் தொகைஇ, எடுத்த நான்கே நான்கென மொழிப. |
கருத்து : இது தோலாக்காதலின் நாலாங்கூறுணர்த்துகிறது. பொருள் : பாராட்டு எடுத்தல் முதல் கொடுப்பவை கோடல் உளப்படத் தொகுத்த நான்கும் தோலாக் காதலின் நாலாங் கூறாமெனக் கூறுவர் புலவர். குறிப்பு : (1) பாராட்டெடுத்தலென்பது, புணர்ந்த பின் தலைமக்கள் ஒருவர் மற்றவரின் நல்லியல்பினை வியப்பதாகும். | (1) | தலைவன் தலைவி நலம் பாராட்டுவதற்குச் செய்யுள்: “கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள”. |
என்பது போல வருவன காண்க. (2) இனி, “நிலத்தினும் பெரிதே வானினுமுயர்ந் தன்று நீரினு மாரள வின்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே” (குறுந். 3) “நாடன், தொல்லைத் திங்கள் நெடுவெண் ணிலவின் மணந்தனன் மன்னெடுந் தோளே இன்று முல்லை முகைநா றும்மே” (குறுந். 193) “உவந்துறைவார் உள்ளத்துள் என்றும்; இகந்துறைவர் ஏதிலர் என்னுமிவ் வூர்” (குறள். 1130) என்பவற்றில் புணர்ந்த தலைவனலம் தலைவி பாராட்டுதல் காண்க. |