| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 349 |
நிமித்தமாம் மெய்ப்பாடுகள் மேற்கூறிய முறையில் நிகழாமையும் உண்டென்பது உணர்த்துகிறது. பொருள் : உயிர்மெலிவிடத்து = கழிபெருங் காதலால் ஆற்றாது உயிர் நையுங்கால்; வினை = அன்புத் திணை நிமித்தமாம் மெய்ப்பாட்டு நிகழ்வு; இன்மையும் உரித்து = மேற்கூறியாங்கு நேராமையும் அமையும். குறிப்பு : ஈண்டு ‘வினை’யென்றது, முன் ‘மன்னிய வினைய நிமித்தம்’ எனச் சுட்டிய மெய்ப்பாட்டுத் தொகுதியையேயாம். இனி, ‘வினையுயிர் என்பதை உம்மைத் தொகையாக்கி, “செயலும் உயிரும் ஓய்ந்து கையறு நிலையில்” என உரைகொள்ளினும் அமையும். ஈற்றேகாரம் அசை. ‘இன்மையும்’ என்பதன் உம்மை எதிர்மறைப் பொருட்டு; உண்மையே பெருவழக்கென்பது ‘உம்மை’க் குறிப்பு. மேற்கூறிய மெய்ப்பாட்டு நிகழ்ச்சி பொதுவியலாதலின் அம்முறையில் அவற்றைச்சுட்டி, ‘அன்னபிறவும் அவற்றொடு சிவணி மன்னிய வினைய நிமித்தமென்ப’ எனவுங்கூறி, அவற்றிற்குப் புறனடையாக அவை ஒரோவழி உயிர் மெலிவிடத்து நிகழாமையும் உளதாம் என்று இதிற் குறிக்கப்பட்டது. கூறிய மெய்ப்பாடுகள் குறித்த முறையில் நிகழ்வதே காதற் பொதுவியல்பென்பதும், விஞ்சுவேட்கையால் நெஞ்சறைபோகிய காதலர் ஆற்றாமையாற் கூடுவர், அன்றேல் மெலிந்து உயிர்வாடுவராதலின், அவர் அன்பொழுக்கம் இங்குக்கூறிய மெய்ப்பாட்டுமுறை கடத்தலும் ஒரோவழி உண்டென்பதும், முறையே இவ்விரு சூத்திரமுஞ் சுட்டும் கருத்தாகும். | சூத்திரம் : 21 | | | | அவையு முளவே அவையலங் கடையே. |
கருத்து : இது மேற்கூறியன தோன்றாவிடத்துக் கீழ்க் குறிக்கும் மெய்ப்பாடுகள் நிகழ்தலுமுண்டென்று உணர்த்துகிறது. பொருள் : அவையலங்கடையே = முன் கூறிய மெய்ப்பாடுகள் நிகழாவிடத்து; அமையும் உள = பின் சுட்டப்படும் பிறவும் உரியவாம். |