பக்கம் எண் :

352நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

“பாலு முண்ணாள், பந்துடன் மேவாள்,
 விளையா டாயமொ டயர்வோள்”

(குறுந். 396)

இவ்வடிகளில், முன் அவள் விரும்பிய பால் பந்து ஆயம் எல்லாம் கூடப்பெறாத்தலைவிக்கு வெறுப்பாயினமை விளக்கப்படுதல் காண்க.

(2)  ‘துன்பத்துப் புலம்ப’லாவது, தனிமை தாங்காக் காதலர் படர்மெலிந்திரங்கலாகும்.

“கரத்தலு மாற்றேனிந் நோயை, நோய்செய்தார்க்
 குரைத்தலும் நாணுத் தரும்” (குறள். 1162)
 “காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
 யாமத்தும் யானே யுளேன்”

(குறள். 1167)

எனும் குறள்கள் படர்மெலிந்திரங்கற் பாட்டுக்களாகும்.

(3)  ‘எதிர்பெய்து பரிதல்’ என்பது, உருவெளி கண்டிரங்குதல்.

வானம் பாடி வறங்களைந் தானாது
அழிதுளி தலைஇய புறவிற் காண்வர
வானர மகளோ நீயே
மாண்முலை யடைய முயங்கி யோயே”

(ஐங்குறுநூறு. 418)

என்னும் ஐங்குறுநூற்றுப் பேயனார் முல்லைப் பாட்டில் சுரத்திடைத் தலைவன் தலைவியின் உருவெளிகண்டு நயந்ததைப் பின் அவளிடம் கூறுதலறிக.

(4)  ‘ஏதம், ஆய்தல்’ என்பது கூட்டத்திற்கு இடையூறாம் தீமை பலவும் ஆராய்தலாம். ஆற்றிடைத் தலைவன் ஊற்றினுக் கழுங்கல், பிரிந்தவர் மறந்து துறந்தனர்கொல்லெனத் துயரல், ஏதிலர்வரைவின் தீதினையஞ்சல், போல்பவை யெல்லாம் இதன்பாலடங்கும்.

“. . . . . . . . . . பாம்பின்
பையுடை இருந்தலை துமிக்கும் ஏற்றொடு
நடுநாள் என்னார் வந்து
நெடுமென் பணைத்தோள் அடைந்திசி னோரே” (குறுந். 268)

எனும் சேரமான் சாத்தன் குறும்பாட்டும்,