பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை355

“வாராக்காற் றுஞ்சா, வரிற்றுஞ்சா ஆயிடை
 ஆரஞர் உற்றன கண்”

(குறள். 1179)

எனத் திருவள்ளுவரும்,

“நனந்தலை யுலகமுந் துஞ்சும்,
 ஓஒயான் மன்ற துஞ்சா தேனே. ”

(குறுந். 6)

எனப் பதுமனாரும்,

“கோடீ ரிலங்குவளை ஞெகிழ நாடொறும்
 பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி
 ஈங்கிவண் உறைதலு முயங்குலம்”

(குறுந். 11)

என மாமூலனாரும்,

“பிறங்குமலை அருஞ்சுர மிறந்தவர்ப் படர்ந்து
 பயிலிரு ணடுநாள் துயிலரி தாகி. ”

(குறுந். 329)

என ஓதலாந்தையாரும்,

“மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
 பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே”

(குறுந். 5)

என நரிவெரூஉத்தலையாரும்,

“கோடீ ரிலங்குவளை நெகிழ நாளும்
 பாடில கலிழ்ந்து பனியா னாவே
. . . . . . . . . . . . . . .
பெருங்கல் நாட!நின் நயந்தோள் கண்ணே”

(குறுந். 365)

என நல்வெள்ளியாரும்,

“பாடின்றிப் பசந்தகண் பைதல பனிமல்க”

(கலி. 16)

எனப் பெருங்கடுங்கோவும், கண்துயில் ஒல்லாக் காதலியல்பு கூறுதல் காண்க.