| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 357 |
“கானம் காரெனக் கூறினும் யானோதே றேனவர் பொய்வழங் கலரே. ” (குறுந். 21) “. . . . . . . . . . . . . . . . பெருங்கல் நாடன் இனிய னாகலி னினத்தி னியன்ற இன்னா மையினும் இனிதோ இனிதெனப் படூஉம் புத்தேள் நாடே. ” (குறுந். 288) இதில் தலைவன் சொல் மெய்யெனக் கொள்ளும் காதலியல் வருதல் காண்க. “கழங்கா டாயத்து அன்றுநம் மருளிய பழங்க ணோட்டமும் நலிய அழுங்கினன் அல்லனோ அயர்ந்ததன் மணனே. ” (அகம். 66) என்பது மது. (13) ‘ஐயம் செய்தல்’: இது, காதல்மிகையாற் கடுக்கு மியல்பு. “ஒண்ணுதல் நீவுவர் காதலர், மற்றவர் எண்ணுவ தெவன்கொல்? அறியேன், என்னும்”(கலி. 4) “நெஞ்சு நடுக்குறக் கேட்டும் கடுத்துந்தாம் ‘அஞ்சிய தாங்கே அணங்காகும்’ என்னுஞ்சொல் இன்தீங் கிளவியாய் வாய்மன்ற, நின்கேள் புதுவது பன்னாளும் பாராட்ட, யானும் இதுவொன் றுடைத்தென எண்ணி அதுதேர’ (கலி. 24) இவற்றில் ஐயுறல் காதற்கியல்பாதல் காண்க. (14) இனி, ‘அவன் தமர் உவத்தலா’வது, தலைவி, தலைவன் சுற்றத்தை நயத்தல். “. . . . . . . . . . . . . . . . தந்தை காமுறற தொடக்கத்துத் தாயுழைப் புக்காற் கவளும் . . . . . . . . . . . . . . . . . . மயங்குநோய் தாங்கி மகனெதிர் வந்து முயங்கினள் முத்தினள் நோக்கிநினைந்தே |