பக்கம் எண் :

360நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

“நன்னீரை வாழி யனிச்சமே, நின்னினும்
 மென்னீரள் யாம்வீழ் பவள்” (குறள். 1111)
 “மலர்காணின் மையாத்தி நெஞ்சே! யிவள்கண்
 பலர்காணும் பூவொக்கு மென்று”   (குறள். 1112)

“மதியு மடந்தை முகனும் அறியா
 பதியிற் கலங்கிய மீன்”

(குறள். 1116)

என வருபவையெல்லாம் தலைவன் தலைவிக்கு ஒப்புமை கோடலைக் குறிப்பன.

(18)  ‘ஒப்புவழி யுவத்தல்’: இஃது அவ்வாறு ஒப்புமை கண்டவழி மகிழுங் காதலியல்பாம்.

“பால்கொள லின்றிப் பகல்போன் முறைக்கொல்காக்
 கோல்செம்மை ஒத்தி பெரும!”

(கலி. 86)

(19)  ‘உறுபெயர் கேட்டல்’; இது தலைவன் பீடார் பெரும்புகழ் பிறர்வாய்க்கேட்டு மகிழ்தல்.

அதற்குச் செய்யுள்:

“மராமர மிவையென வலிய தோளினான்,
 அராவணை அமலனென் றயிர்க்கு மாற்றலான்,
 இராமனென் பதுபெயர், இளைய கோவொடும்
 பராவரு முனியொடும் பதிவந் தெய்தினான்”

(கம்பர். பால. கார்முகப். செய். 59)

“பூணியன் மொய்ம்பினன் புனித னெய்தவில்
 . . . . . . . . . . . . . . . . . .
 . . . . . . . . . . . . . . . . .
 நாணினி தேற்றினான் நடுங்கிற் றும்பரே”

(மேலது. செய். 60)

“கோமுனி யுடன்வரு கொண்ட லென்றபின்
 தாமரைக் கண்ணினா னென்ற தன்மையால்
 ஆமவ னேகொலென் றைய நீங்கினாள்,
 வாமமே கலையிற வளர்ந்த தல்குலே”

(மேலது, செய். 62)

இவற்றில், ‘இராமன் சிவன் வில்லை நாணேற்றி முறித்துச் சீதைக்குரிய நாயகனாயினான்’ எனத் தோழிவந்து கூற, சீதை