| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 361 |
தான் முன் தெருவிற் கண்டு காதலித்து மனத்தால் மணந்த அத்தலைவன் பெயரும் புகழும் அத்தோழிவாய்க் கேட்டு மகிழ்ந்ததைக் கம்பர் விளக்குதலறிக. “நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட் டிசையும் இனிய செவிக்கு. ” (குறள். 1199) “மென்றோள் ஞெகிழ்த்தான் தகையல்லால் யான்காணே னன்றுதீ தென்று பிற” (கலி. 142) என வருவனவும் ‘உறுபெயர் கேட்டு’ மகிழும் கூற்றுக்களாதலறிக. (20) ‘நலத்தக நாடிற் கலக்கமும் அதுவே’ என்பது, நன்றாகத் தகுதிநோக்கி யாராயின் மயக்கமென்பதும் மேலது போலவே காதற்றிணை நிமித்தமாகும் மெய்ப்பாடேயாம். முன் குறித்த 19ம் அமையாவழியே, அவற்றினிறுதியில் கலக்கம் எழும் என்னும் அதன் சிறப்பியல் குறித்தற்கு அது இறுதியில் வேறு பிரித்துக் கூறப்பட்டது. அதற்குச் செய்யுள்: “யாவது மறிகிலர் கழறு வோரே; தாயில் முட்டை போலவுட் கிடந்து சாயி னல்லது பிறிதெவ னுடைத்தோ? யாமைப் பார்ப்பின் அன்ன காமங் காதலர் கையற விடினே” (குறுந். 152) இக் கிளிமங்கலங்கிழார் பாட்டில் ஆனாக்காத லாற்றாத் தலைவி கலங்குதல் காண்க. இவையெல்லாம் பால் பிரியாது பொதுவாகக் கூறப்பட்டதனால், பெருவழக்காய்த் தலைவியர்மாட்டே நிகழுமெனினும், ஏற்புழித் தலைவர்க்குரியன கோடலும் கடிவரையின்மை கருதற்பாற்று. | சூத்திரம் : 23 | | | | முட்டுவயிற் கழறல், முனிவுமெய்ந் நிறுத்தல், அச்சத்தினகறல், அவன்புணர்வு மறுத்தல், தூதுமுனி வின்மை, துஞ்சிச் சேர்தல், |
|