பக்கம் எண் :

38நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

திணைக்குரிப் பொருள்களாக விதந்துகூறும் புணர்தல் முதலிய ஐந்தும் எந்த நிலத்தும் வந்து மயங்குதல் மேற்சூத்திரத்திற் கூறப்பட்டது. பேரளவில் அவ்வைந்தனுளடங்காமல், இயல்பற்றி உரிப்பொருளா யமைவன பிறவுமுள என்பதை இவ்வியல் ‘கொண்டுதலைக்கழிதல்’ ‘கலந்தபொழுதும்’ என்ற சூத்திரங்களிற் சுட்டுவதால், அத்தகைய பிற அகவுரிப் பொருள்களும், விதந்தோதிய ஐந்திணையுரிப் பொருள்கள் போலவே, வரையறையின்றி யெந்த நிலத்தும் வந்து மயங்குதல் கூடும் என்பதை இந்தச் சூத்திரம் விளக்குகிறது. ஈண்டு ‘உரிப்பொருளல்லன’ என்பது முன்னைச் சூத்திரத்தில் ‘திணைக்குரிப் பொருள்’ என விதந்தோதிய தலைமக்களொழுக்கம் ஐந்துமல்லாத பிறவெனக் கொள்ளல் வேண்டும். ‘உரிப்பொருளல்லன’ என்பதை ‘அல்லன உரிப்பொருள்’ எனச் சொன்மாற்றி, முன்விதந்தோதிய ஐந்துமல்லாத உரிப்பொருளாவன எனக்கொள்ளுவதே ஈண்டுப் பெரிதும் பொருத்தமுடைத்தாம்.

இனி, இவ்வாறு கொள்ளாமல், உரிப்பொருளல்லாத கருப்பொருளும் முதற்பொருளும் பிறதிணையோடு சேரும் என்று இளம்பூரணர் பொருள் கொள்வதும் பொருந்தாது. ஏனெனில், திணைமயக்குறுதலும் என்ற சூத்திரத்தால் முதற்பொருள் மயக்கமும் ‘எந்நில மருங்கிற் பூவும்புள்ளும்’ என்பதால் கருப்பொருள்களின் மயக்கமும் முன் தனி வேறு சூத்திரங்களாற் கூறியிருத்தலின், அவற்றையே இச்சூத்திரத்திலும் தொல்காப்பியர் கூறினாரென்பது கூறியது கூறல் என்னுங் குற்றத்திற்கு அவரையாளாக்கும்.

“உரிப்பொருள் என்றோதிய ஐந்திணையு மல்லாத கைக்கிளை பெருந்திணையும் நால்வகை நிலத்தும் மயங்கவும் பெறும்” என்னும் நச்சினார்க்கினியர் உரையும் அமைவுடைத்தன்று. கைக்கிளை பெருந்திணைகளுக்கு நிலம் பொழுதுகளில் எதுவுமே தனியுரிமை கூறாததால், விலக்கில்லா நிலம் பொழுதுகளில் அவை வந்து மயங்குமெனச் சுட்டுதல்மிகையாகும். அன்றியும் மேல் இரண்டாஞ் சூத்திர முதல் கீழ் 42ஆம் சூத்திரமுடிய நிரலே நடுவணைந்திணைகளின் இயல்புகளையே விளக்கிப், பிறகு 43 முதல் 49 வரையுள்ள சூத்திரங்களில் சில பொதுவியல்புகள் கூறி, அவற்றின்பின் இவ் வியலிறுதியில் 50, 51ஆம் சூத்திரங்களில் கைக்கிளை பெருந்திணைகளை விளக்கிமுடிக்கும் இந்நூலார் ஈண்டு அன்பினைந் திணையின் இயல்புகளுக்கிடையே