பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை39

இன்றியமையாத் தொடர்பு எதுவுமின்றி இறுதியிற் கூறும் கைக்கிளை பெருந்திணைகளை யிழுத்து அவற்றின் இலக்கணம் கூறுமுன் மயக்கங் கூறினாரெனக் கொள்ளுதல் எவ்வாற்றானுஞ் சாலாமையறிக.

ஐந்திணையல்லாப் பிற உரிப்பொருள் பலநிலத்து மயங்குதற்குச் செய்யுள்:

கொண்டுதலைக்கழிதல் அத்தகைய பிற உரிப்பொருளாதலுண்டென அடுத்த பின் சூத்திரம் கூறுகிறது. அவ்வுரிப்பொருள் புணர்தற்குரிய குறிஞ்சி நிலத்தில் மயங்குவதாகக் கீழ்வரும் பழம்பாட்டுக் கூறுதல் காண்க.

1. “நினையாய், வாழி, தோழி!” எனும் பூதந்தேவனார் குறும்பாட்டில்,

“. . . . . . . . . புலிப்பகுவா யேற்றை
 . . . . . . . . . . விடர்முகைக்
 கோடை ஒற்றிய கருங்கால் வேங்கை
 வாடுபூஞ் சினையிற் கிடக்கும்
 உயர்வரை நாடனொடு பெயரு மாறே”

(குறுந். 343)

புலி வேங்கைச் சினையிற் கிடக்கு முயர்வரை நாடாகவே நிலம் குறிஞ்சி: நாடனொடு பெயர்தல் கொண்டுதலைக் கழிதலாமுரிப்பொருள். இன்னும் “ஊஉரலரெழ” எனும் பெருங்கடுங்கோவின் பாட்டு மதுவாதலறிக.

“. . . . . . . . .
 உணலாய்ந் திசினா லவரொடு சேய்நாட்டு
 விண்டொட நிவந்த விலங்குமலைக் கவாற்
 கரும்புநடு பாத்தி யன்ன
 பெருங்கழிற் றடிவழி நிலைஇய நீரே”

(குறுந். 262)

இதில், புணர்தற்குரிய மலையிற் றலைவனுடன் போகும் தலைவி களிற்றடி வழி நிலைஇய நீரைத் தலைவனோ டுண்ணுதலை விரும்பும் ஒழுக்கம் மயங்குதலறிக.

இனி, கொண்டுதலைக்கழிதல்,