| 40 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
“அன்னாய் வாழி வேண்டன்னை, நம்படப்பைத் தேன்மயங்கு பாலினும் இனிய, அவர்நாட் டுவலைக் கூவற் கீழ மானுண் டெஞ்சிய கலுழி நீரே” (ஐங். 203) எனும் ஐங்குறுநூற்றுப் பாட்டில் குறிஞ்சி நிலத்தும், “ஒன்றானு நாம்மொழிய லாமோ செலவுதான் பின்றாது பேணும் புகழான்பின் - பின்றா வெலற்கரிதாம் வில்வலான் வேல்விடலை பாங்காச் செலற்கரிதாச் சேய சுரம்” (திணைமாலை 150ல் செய். 87) எனும் திணைமாலை வெண்பாவில் பாலைநிலத்தும், வந்து மயங்குதல் காண்க. இதுபோலவே மற்றைய ஐந்திணையிலடங்கா உரிப்பொருள் அனைத்தும் எல்லாநிலத்தும் மயங்குமென்றறிக. | சூத்திரம் : 14 | | | | புணர்தல் பிரித லிருத்த லிரங்கல் ஊட லிவற்றி னிமித்த மென்றிவை தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே. |
கருத்து : இச்சூத்திரம் அகப்பொருட் பகுதியிற் சிறந்த அன்பினைந்திணைக்கு நேருரிமைகொண்ட ஒழுக்க வகைகளை உணர்த்துகிறது. பொருள் : புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடலிவற்றின் நிமித்த மென்றிவை = கூடுதல், பிரிதல், பிரிவிடையாற்றி யிருத்தல், ஆற்றாதிரங்கல், புலவி என்ற ஐந்தும் அவற்றிற் கியைபுடைய நிமித்தங்களுமே; தேருங்காலைத் திணைக்குரிப்பொருளே = ஆராயும் பொழுது அன்பினைந்திணை யெனற்குச் சிறந்துரிய பொருள்களாம். குறிப்பு : இதில் ஈற்றேகாரம் தேற்றமாகும். முதல் கரு உரிப்பொருள்களனைத்தும் அகத்திணைப் பகுதியாகவே அமைத்துக் கோடல் தவறன்றாயினும், திணையென்பது |