| 412 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
| சூத்திரம் : 8 | | | | அச்சமும் நாணும் மடனுமுந் துறுத்த நிச்சமும் பெண்பாற் குரிய என்ப. |
கருத்து : இதில் முன்னதில் ஆணியல்பு கூறி, பெண்ணியற் பண்புகளைக் குறிக்கின்றார் தொல்காப்பியர். பொருள் : அச்சமும் = உட்கும்; நாணும் = வெட்கமும்; மடனும் = அன்பாற் குறைகாணாப் பண்பும்; நிச்சமும் பெண்பாற்கு உரிய = எஞ்ஞான்றும் பெண்ணியல்பென்பார் அகநூற்புலவர். குறிப்பு : கண்டறியாப் புதுமையாற் பெண்டிர்க்கு அச்சம்பிறக்கும். எள்ளும் பழிக்கு உள்ளம் வெள்குதல் பெண்ணியல்; ஆதலிற் காதலைச் சாதல் நேரினும் பேதைப் பெண்டிர் ஓதத் துணியார். உற்ற காதலர் குற்றம் உணராமல் முற்றுநம்பும் பெற்றிமை மடனாம். மடனைப் பேதைமை என்பர், அவற்றின் வேறுபாடறியார். “எள்ளல், இளமை பேதைமை, மடன் என்றுஎள்ளப்பட்ட நகை நான்கென்ப” என்று மடனைப் பேதைமையின் வேறாய்த் தொல்காப்பிய ரெண்ணுதலறிக. அறிந்தும் அறியார்போலமைதல் பேதைமை; காதலாற் குறை காணமாட்டாமை மடம். இவை “நிச்சமும் பெண்பாற்குரிய” என்றதன் குறிப்பும் அறிதற்குரியது. மேற்சூத்திரம் சுட்டிய ஆணியல்கள் நிரம்பா ஆடவர் ஒரோவழி உளராதல் கூடுமெனினும், இதிற்குறித்த பண்பு மூன்றும் குடிப்பிறந்த மகளிரெல்லார்க்கும் என்றும் இன்றியமையா இயல்பாகும் என்ற உண்மையை விளக்க, மேல் “ஆடூஉமேன” என வாளாது கூறி, இதில் “நிச்சமும் உரிய” என்று தெளிக்கப்பட்டதறிக. இனி, இப்பால் இயல் அறியின், பின் களவுத்திணைத் துறைகளில் காணப்படும் நீரமையும் நுட்பமும், நேர்மையும் விளங்கும். இவ்வியலில் “காமத்திணையில்” என்னும் சூத்திரத்துக் “குறிப்பினும் இடத்தினுமல்லதுவேட்கை நெறிப்படவாரா அவள் வயினான, ” என்பதும், “தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல் எண்ணுங்காலை கிழத்திக்கில்லை, ” என்பதும், பின் பொருளியலில், “கிழவோற் சேர்தல் கிழத்திக்கில்லை” என்பதும் பிறவும், பெண்ணியலாலே பிறங்குந்துறைகள். தலைவன் குறிப்பறிந்தொன்றிய தலைவிதன் காதலுணர்வைக் கரந்தகத்தடக்கிப் |