பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை413

பிரிவாற்றாமற் பேதுற்றுழப்பினும், தானது கிளத்தல் தலைவிக்கின்மை அவள் பெண்ணியலறிவின் விளக்கமாகும். கையறவுற்று மெய்யுறு புணர்வுக்குக் கிணங்கும்போதும், தழையும் காதல் விழைவைக் கரந்து தலைவி செயலற்றுத் தழுவுந் தலைவன் எழுவுறழ் தோளில் குழைவதன்றிக் கூற்று நிகழ்த்து மாற்றல் காணாள். இவையெலாம் தேறப் பாலியலறிவு வேண்டுமாதலின், துறைகூறத் தொடங்குமுன், இருபாலவ ரியல்பும் இரு நூற்பாவால் இடைப்பிறவரலாய்த் தொடுக்கப்பெற்றன. இவை கூறும் இயல்புகளால், தலைமக்களின் அன்பினைந்திணைத் துறையொழுக்கமும் வினைகளுமமைவதாகலின், இவையறிதல் வேண்டப்படுதலுணர்க.

சூத்திரம் : 9 
 வேட்கை, ஒருதலை உள்ளுதல், மெலிதல்,
ஆக்கம் செப்பல், நாணுவரை யிறத்தல்,
நோக்குவ எல்லா மவையே போறல்,
மறத்தல், மயக்கம், சாக்கா டென்ற
சிறப்புடை மரபினவை களவென மொழிப.

கருத்து : அறிவுடம்பட்டு உணர்வோ டுயிரொன்றி உள்ளம் புணர்ந்த காதலர், உலகறிய வரைந்தோ அலரின்றி மறைந்தோ கூடி இன்பம் துய்க்கப் பெறாவழிக் கையிகந்து பெருகுமவர் காதலைக் கரந்தொழுக நேர்தலின், ஆற்றாமையா லவரடையும் காம வேதனைகள் இந்நூற்பாவிற் சுட்டப்பெறுகின்றன.

பொருள் : வேட்கை = அறிவுடம்பட்ட காதலர் செறியப் பெறாமையால் எய்தும் ஏக்கறவு. அதாவது பெருவிருப்பு; ஒருதலை உள்ளுதல் = ஒருவரை ஒருவர் இடைவிடாது நினைத்தல்; மெலிதல் = கூடப்பெறாது காமத்தால் வாடல்; ஆக்கம் செப்பல் = பிரிவாற்றாத் தலைவி, தணந்த தலைவனுக்கு ஊறு நேராது வாழ்த்தல்; நாணு வரையிறத்தல் = நாணழிதல்; நோக்குவ எல்லாம் அவையே போறல் = வெளியே காணுபவை அனைத்தும் உள் உணர்வின் உருவெளி ஒத்தல்; அதாவது கண்ணிற்றோன்றுவ எண்ணிய வொத்தல்; மறத்தல் = காதலன்றி ஏதும் நினையாதயர்த்தல்; மயக்கம் = மால்கொண்டு மருளல்; அதாவது காதலாற் கலங்கல்; சாக்காடு = சாதல்; என்ற சிறப்புடை மரபினவை எனப்பட்ட முறையே காதற்குச் சிறந்த