| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 415 |
தலைவி உள்ளல் : “விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து” (குறள் 1209) “உள்ளின் உள்ளம் வேமே; உள்ளா திருப்பினெம் மளவைத் தன்றே; வருந்தி வான்றோய் வற்றே காமம்; சான்றோ ரல்லர்யா மரீஇ யோரே” (குறுந். 102) 3. மெலிதல் : (தலைவன் மெலிவு) | 1. | “ஒண்ணுதற் கோஒ உடைந்ததே, ஞாட்பினுள் நண்ணாரு முட்குமென் பீடு” | | | (குறள். 1088) |
| 2. | “பாலொத்த வெள்ளருவிப் பாய்ந்தாடிப் பல்பூப்பெய் தாலொத்த ஐவனங் காப்பாள்கண் - வேலொத்தென் நெஞ்சம்வாய்ப் புக்கொழிவு காண்பானே? காண்கொடா அஞ்சாயற் கேநோவல் யான்” | | | (திணைமாலை 19) |
| 2. | சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்பலத்தும் என்
சிந்தையுள்ளும் உறைவா னுயர்மதிற் கூடலினாய்ந்த ஒண்தீந் தமிழின் துறைவாய் நுழைந்தனையோ? அன்றி ஏழிசைச் சூழல்புக்கோ இறைவா! தடவரைத்தோட் கென்கொலாம் புகுந்தெய்தியதோ” | | | (திருக்கோவை. 25) |
தலைவி மெலிவு; “பெருந்தோள் நெகிழ வவ்வரி வாடச் சிறுமெல் லாகம் பெரும்பசப் பூற
(நற். 358 : 1-2) “மலரே ருண்கண் மாணலந் தொலைய, வளையேர் மென்றோள் ஞெகிழ்ந்ததன் தலையும் மாற்றா கின்றே தோழி!ஆற் றலையே!” (குறுந். 377 : 1-3) 4. ஆக்கம் செப்பல் : | 1. | “. . . . . . . . . . . . . . தாழ்பு துறந்து தொடி நெகிழ்த்தான் போகிய கானம் இறந்துஎரி நையாமல், பாஅய் முழங்கி வறந்தென்னை செய்தியோ?வானம்! சிறந்தஎன் கண்ணீர்க் கடலாற் கனைதுளி வீசாயோ? கொண்மூக் குழீஇ முகந்து. . . . ” | | | (நெய்தற்கலி. 28: 18-22) |
|