| 416 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
இதில், சுரஞ்சென்ற தலைவன் வெம்மையால் வருந்தாமல் துளித்துவ மழையைத் தலைவி வேண்டி வாழ்த்தல் காண்க. | 2. | “. . . . நன்னர் நெஞ்சம் என்னொடும் நின்னொடும் சூழாது கைம்மிக்கு இறும்புபட் டிருளிய விட்டருஞ் சிலம்பிற் குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக் கான நாடன் வரூஉம் யானைக் கயிற்றுப்புறத் தன்ன கண்மிசைச் சிறுநெறி மாரி வானம் தலைஇ நீர்வார்பு இட்டருங் கண்ண படுகுழி இயவின் இருளிடை மிதிப்புழி நோக்கியவர் தளரடி தாங்கிய சென்ற தின்றே” | | | (அகம். 128) |
எனவரும் கபிலர் நெடும்பா வடிகளின் குறிப்புமிதுவே. | 2. | “தோளும் தொல்கவின் தொலைய, நாளும் நலங்கவர் பசலை நல்கின்று நலிய, . . . . . . . . . . . . . . . . . . . கவ்வை தூற்றும் வெவ்வாய்ச் சேரி அம்பல் மூதூர் அலர்நமக் கொழியச் சென்றன ராயினும், செய்வினை அவர்க்கே வாய்க்கதில் வாழி, தோழி! . . . . . ” | | | (அகநா. 347 ; 1-2; 6-9) |
இன்னும், “பாடின்றிப் பசுந்தகன்” எனத்தொடங்கும் பாலைக்கலி முழுதும் இத்துறையாதல் காண்க. (கலித்தொகை. பாலை. 15) 5. நாணுவரை யிறத்தல் : (தலைவன் நாணழிவு) “பொன்னே ராவிரைப் புதுமலர் மிடைந்த பன்னூன் மாலைப் பனைபடு கலிமாப் பூண்மணி கறங்க வேறி, நாணட்டுப் பழிபடர் உண்ணோய் வழிவழி சிறப்ப. . . ” (குறுந். 173 : 1-4) இன்னும், “விழுத்தலைப் பெண்ணை” என்ற மாதங் கீரன் குறும்பாட்டில், |