| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 417 |
“. . . . . பிறரெள்ளத் தோன்றி ஒருநாண் மருங்கில் பெருநாண் நீங்கித் தெருவி னியல்வும் தருவது கொல்லோ . . . . ” (குறுந். 182 : 3-5) எனும் தலைவன் கூற்றவன் நாணழிவு கூறுதலும் காண்க. இன்னும், “அறிவும், நம்மடக்கமும் நாணொடு வறிதாக” (கலி. 138) “நோனா வுடம்பு முயிரு மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து”(குறள். 1132) “காமக் கடும்புன லுய்க்குமே நாணொடு நல்லாண்மை என்னும் புணை” (குறள். 1134) என வருவனவும் தலைவனாணழிவு கூறும், தலைவி நாணழிதல்: “நாணென வொன்றோ வறியலம், காமத்தாற் பேணியார் பெட்ப செயின்” (குறள். 1257) “. . . மிகுபெயல், உப்புச்சிறை நில்லா வெள்ளம்போல நாணுவரை நில்லாக் காமம் நண்ணி . . . . ” (அக. 208 : 18-20) “காமம் கைம்மிகச் சிறத்தலின் நாணிழந்து” (அகம். 266 : 8) “. . . சேணும் எம்மொடு வந்த நாணும் விட்டேம் அலர்கவிவ் வூரே” (நற். 15 : 9-10) 6. நோக்குவ எல்லாம் அவையே போறல்: “ஓங்கெழிற் கொம்பர் நடுவி தெனப்புல்லும், காந்தட் கிவரும். கருவிளம் பூக்கொள்ளும், மாந்தளிர் கையிற் றடவரும், மாமயில் பூம்பொழி னோக்கிப் புகுவன பின்செல்லும், தோளெனச் சென்று துளங்கொளி வேய்தொடும் நீள்கதுப் பிஃதென நீரற லுட்புகும்” (இளம்பூரணர் உரை மேற்கோள்) . . . . . . . . . . . . . . முன்னிலையாக்கல் : 2. “ஓடுந் திமில்கொண் டுயிர்கொல்வர் நின்னையர்
இக் களவியல் நூற்பா 9 விளக்கத் தொடர்ச்சியும்; நூற்பா 10இல் உரையும், சில விளக்கமும் கிடைக்கப் பெறவில்லை. பின்வருவன ‘முன்னிலையாக்கல்’ என்பதை விளக்குவன : |