| 418 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
கோடும் புருவத் துயிர்கொல்வை மன்னீயும்; பீடும் பிறரெவ்வம் பாராய்; முலைசுமந்து வாடும் சிறுமென் மருங்கிழவல் கண்டாய்” (சிலப். கானல்வரி. 19) 3. இன்னும், காமனைத் தொழுது தன்னைச் “சீவகனகலம் சேர்க்க” வரம் பெற்றுத் திரும்பிய சுரமஞ்சரி, தான் காதலிக்கும் சீவகன் தன் “கடியறை மருங்கினின்ற மைந்தனைக்கண்டு நாணி, வடியுறு கடைக்கணோக்க நெஞ்சுதுட் கென்ன வார்பூங்கொடியுற ஒசிந்து நின்றாள். “அப்போதவள் வேட்கையைக் குறிப்பாலுணர்ந்த சீவகனும் காமம் கைமிக, அவளொடு “இன் தமிழியற்கை இன்ப நிலைபெற நெறியிற்றுய்க்க” நினைத்து, அவளை முன்னிலையாக்கிச் சொல்லும் பாட்டுமித்துறை விளக்கும். “தேறினேன் தெய்வமென்றே; தீண்டிலே னாயி னுய்யேன் : சீறடி பரவ வந்தேன் அருளெனத் தொழுது சேர்ந்து, நாறிருங் குழலி னாளை நாகணை விடையிற் புல்லிக் கோறொடுத் தநங்க னெய்யக் குழைந்துதார் திவண்ட தன்றே” (சிந்தாமணி சுரமஞ்சரி : 68) இதில், தன்னுறு வேட்கை தலைவன்முற்றிறவாது நாணுந்தலைவியைத் தலைவன் முன்னிலையாக்கலும், பின்னவளோடும் “இன் தமிழியற்கை இன்பம்” துய்த்தலும் முறையே வருதலறிக. சொல்வழிப் படுத்தல் = தான் சொற்படி நடக்கத் தலைவியைத் தூண்டித் தலைவன் வேண்டல். இதற்குச் செய்யுள் “சொல்லிற் சொல்லெதிர் கொள்ளா, யாழநின் திருமுக மிறைஞ்சி நாணுதி; கதுமெனக் காமம் கைம்மிகிற் றாங்குதல் எளிதோ? கொடுங்கே ழிரும்புற நடுங்கக் குத்திப் புலிவிளை யாடிய புலவுநாறு வேழத்தின் தலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின் கண்ணே கதவ வல்ல; நண்ணார் அரண்தலை மதில ராகவும் முரசுகொண் டோம்பாண் கடந்த அடுபோர்ச் செழியன் பெரும்பெயர்க் கூட லன்னநின் கரும்புடைத் தோளு முடையவா லணங்கே. ” (நற். 39) |