| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 419 |
தலைவியை முன்னிலைப் படுத்தித்தான் முதலிற் சொல்லியதன் ஆற்றாவேட்கையை அவள் ஏற்றுரை தாராமை நேர்மையன்று; எனில், அவள் வாளாமை அன்புக் குறையாலன்று; பெண்மைக்குரிய பெருநாணால் அவள் பேசக் கூசினள்; அஃதவள் திருமுகம் இறைஞ்சுதலாற்றேற்றம். தன்னளவில் கைமிகு காமந்தாங்குந்தரமன்று; அதன் மேலவள் கண்ணும் தோளும் தன்னை யணங்குவதாலும் தன்னாற்றாமைக் கவள்இரங்கி இணங்குவதே முறை எனத் தலைவன் இரப்பதை மருதனிளநாகனாரிதிற் றெளிப்பது காண்க. 3. நன்னய முரைத்தல் - தலைவியின் நலம் பாராட்டல் இதற்குச் செய்யுள்: | 1. | மதியு மடந்தை முகனு மறியா பதியிற் கலங்கிய மீன்” | | | (குறள். 1126) |
| 2. | “கயலெழுதி, வில்லெழுதிக் காரெழுதிக், காமன் செயலெழுதித், தீர்ந்தமுகம் திங்களோ? காணீர் திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே அங்கணேர் வானத் தரவஞ்சி வாழ்வதுவே” | | | (சிலப். கானல் 11) |
4. நகை நனியுறாஅ அந்நிலையறிதல் - தலைவன் தன்னய முரைத்தற் ககமகிழும் தலைவி அதை மறைக்க, மலராது முகிழ்க்குமவள் முறுவற் குறிப்பைத் தலைவன் தேறல். இதற்குச் செய்யுள் : | 1. | “மாணிழை பேதை நாறிருங் கூந்தல் ஆணமு மில்லாள் நீருறை சூருடைச் சிலம்பிற் கணங்காய் முயன்ற செறியியல் நொதுமல் நோக்கைக் காண்மோ, நெஞ்சே வறிதான் முறுவற் கெழுமிய நுடங்குமென் பணைவேய் சிறுகுடி யோளே. ” | | | (இளம்பூரணர் உரைமேற்கோள்) |
| 2. | “யானோக்குங் காலை நிலனோக்கும்; நோக்காக்கால் தானோக்கி மெல்ல நகும்” | | | (குறள் : 1149) |
5. மெலிவு விளக்குறுத்தல் தன்னுறு வேட்கை தாங்கொணாத் தலைவன் தானுறு தளர்வைத் தலைவிக்குத் தெளித்தல், இதற்குச் செய்யுள் : |