பக்கம் எண் :

420நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

“எரிமணிக் கலாபத் திட்ட இந்திர நீல மென்னும்
 ஒருமணி உந்தி நேரே ஒருகதி ருமிழ்வ தேபோல்
 அருமணிப் பூணி னாள்தன் அவ்வயி றணிந்த கோலத்
 திருமயி ரொழுக்கம் வந்தென் திண்ணிறை கவர்ந்த தன்றே”

(சிந்தா. 2061)

இதில், தான் கூட விரும்பும் சீவகனை நேரிற் கண்டு நாணி ஒசிந்து நின்ற சுரமஞ்சரிக்கவன் தன் தளர்வுரைத்த பரிசு கூறப்படுதலறிக.

2. “தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
 மாலை உழக்கும் துயர்”
(குறள். 1135)

6.   தன்னிலையுரைத்தல் - (கையிகந்த காமம் நலிய ஆற்றாத் தலைவன் தன் மெலிவு விளக்கியும் உடன் பாடுரையாத் தலைவிக்கு) அவன் அவளிரங்குமாறு ஆனா நோயால் நோனாத் தன் படர்நுவலல்.

1.“நோனா உடம்பும் உயிரு மடலேறும்
 நாணினை நீக்கி நிறுத்து”
(குறள். 1132)
2. “எழின்மருப் பெழில்வேழம்” எனும் நெய்தற்கலியில்,
“. . . அறிவும்நம் மறிவாய்ந்த அடக்கழும் நாணொடு
வறிதாக . . . . . . . . . . . . . . . . . .
உரிதென் வரைத்தன்றி ஒள்ளிழை தந்த
பரிசழி பைதல்நோய்மூழ்கி, எரிபரந்த
நெய்யுண் மெழுகின் நிலையாது, பைபயத்
தேயும் அளித்தென் னுயிர்.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
என்றுயான் பாடக் கேட்டு
அன்புறு கிளவியாள் அருளிவந் தளித்தலின். . . . ”
 (நெய்தற்கலி. 21 : 3-4; 20-23; 26-27)

என்னுமடிகளுமித்துறை குறிப்பவையே.

இதில்,

“என்றுயான் பாடக் கேட்டு
அன்புறு கிளவியாள் அருளிவந் தளித்தலின்”