| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 421 |
என வருவதால், தலைவிக்குத் தலைவன் தன்னிலை கூறியதும், அது கேட்ட தலைவி அருளி வந்தளித்ததும், தெளிக்கப் படுதலறிக. 7. தெளிவகப்படுத்தல் - அவனிலைக் கிரங்கித்தன் அன்புடைத் தலைவன் துன்பந்தீர இன்பக் கூட்டத்திற்கிணங்கித் தலைவி உடன்பட்டதைக் குறிப்பாலுணர்ந்து தலைவன் தேர்ந்த தன் துணிவை ஆர்ந்து மனங்கொள்ளுதல். அதற்குச் செய்யுள் : | 1. | “கன்று புகுமாலை நின்றோ ளெய்திக் கைகவியாச் சென்று, கண்புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகங் தீண்டித் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ, நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல் அந்தீங் கிளவிக் குறுமகள் மென்றோள் பெறல்நகைஇச் சென்றஎன் நெஞ்சே” | | | (உரை மேற்கோள்) |
| 2. | “யாயும் ஞாயும் யாரா கியரோ; எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்; யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே” | | | (குறுந். 40) |
‘என்றின்னவை நிகழுமென்மனார் புலவர்’ = என்றிதிற் கூறிய ஏழும் கூட்டமின்மை ஆறாத் தலைவனுக்கு இயல்பாம் நிலைகளென்பர் களவுநூற்புலவர். குறிப்பு : இந்நூற்பா, மெய்யுறு கூட்டம் எய்தப் பெறாத் தலைவன் ஆனாக்காம நோயால் அடையு நிலைகளைக் கூறுதல் வெளிப்படை. புணர்வின் பின்னிவை உணர்வின் வாரா. இவற்றைப் பிரிதலும் பிரிதனிமித்தமுமாந் துறைகளென்பார், களவுக் காதலறவறியாதார்; இனித் தலைவர்க்கன்றித் தலைவியர்க்குச் சாற்றுதல் கூடா. “காமத்திணையிற் கண்ணின்று வரூஉம் நாணுமடனும் பெண்மைய வாதலிற் குறிப்பினுமிடத்தினு மல்லது வேட்கை நெறிப்பட வாரா அவள் (தலைவி) வயினான” என்று இவ்வியலிற் கூறப்படுதலின், வேட்கை வெளிப்படுத்தும் இத்துறை ஏழும் தலைவிக் கொவ்வாமை தேற்றம். . . . . . . . . . . . . .
11, 12ஆம் நூற்பாக்களின் உரை விளக்கம் கிடைக்கப்பெறவில்லை! |