| 428 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
(5) இனிப் பழைய உரைகாரர் கொள்கைப்படி இச்சூத்திரம் இவ்வெட்டு மணத்தைக் குறிப்பதாகக் கொண்டாலும், வரிசைமுறையில் இவ்வெட்டில் முதலிலிருந்து முறையே மூன்றும் நான்குமாக ஏழுபோக இறுதிநின்ற பைசாசம் எண்ணப்படாமலும், நடுநின்ற கந்தருவம் பெருந்திணை கொள்ளும் பின்னான்கனோடு சேர்த்தெண்ணப் பட்டும் வரும். இது அசங்கதமாகமுடியும். இதை விலக்க வேண்டி, முன்னைய மூன்று என்பதை முதலிலிருந்து எண்ணுவதைவிட்டுக் கந்தருவத்தை விலக்கெல்லையாக வைத்து, அதன் பின்னுள்ள மூன்றை முதலில் மூன்றெனவும், கந்தருவத்துக்கு முன்னிற்கும் நான்கையும் பின்னர் நான்கெனவும் உரைகாரர் இயல்முறை பிறழக்கூறநேர்ந்தது. (6) இப் பொருந்தா உரை கோடலால் வரும் அசங்கதம் இன்னும் ஒன்றுளது. குற்ற மற்ற பிரமமுதலிய முதல் நான்கையும் குற்றம் நிறைந்த பொருந்தாத இழிந்தகாமமான பெருந்திணையாகவும், வெறுக்கவேண்டிய பாவக்கூட்டமான பைசாசம் ஆசுரம் இராக்கதங்களைப் புரைதீர்காமமான தூயவுணர்ச்சியை நிலைக்களனாகக்கொண்டு நிற்கும் கைக்கிளையாகவும் கூறுதல் விபரீதமன்றோ?தொல்காப்பியர் செந்திறக் கைக்கிளை உயர்ந்தோர் மேற்கொள்ளுந் தவறற்ற நல்ல காமமெனவும், ‘நோந்திறப் பெருந்திணை’ இழிந்தோர்பாற்படும் தவறான பொருந்தாக் காமமெனவும், அகத்திணை 53-54ஆவது சூத்திரங்களால் தெற்றென விளக்கிப் போந்திருக்கவும், அவர் கூற்றுக்கு மாறாகப் பாவக்கைக்கிளையும் புனிதப்பெருந்திணையும் உள்ளனபோலக் கொள்ளுதல் இழுக்காகும். சிந்திப்பார்க்கு வடநூல் கூறும் எட்டுக்கூட்டமல்லாத ஆசிரியர் தாமே தம் தமிழிலக்கண நூலில் தமிழ்மரபாக விளக்கியன வேறாதல் வேண்டுமென விளங்கும். அவை யாவையெனத்தெளிதற்கு அடுத்த சூத்திரத்தையும் சிறிது கவனித்தல்வேண்டும். இனி, அடுத்த 15ஆவது சூத்திரம், “முதலொடு புணர்ந்த யாழோர் மேன, தவலருஞ்சிறப்பின் ஐந்நிலம்பெறுமே. ”என்பது. இதற்கு இளம்பூரணர், “கருப்பொருளொடு புணர்ந்த கந்தருவநெறி களவும் உடன்போக்கும் இற்கிழத்தி காமக்கிழத்தி காதற்பரத்தையும் எனச்சொல்லப்பட்ட ஐவகைக்கூட்டம்” எனப்பொருள் கூறினார். (1) உடன்போக்கு, களவினொரு பகுதியேயாகலானும், இருகிழத்தியார் பரத்தையர் கூட்டமெல்லாம் கற்புக்கைகோளி |