பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை429

லடங்கிய சிலவுட்பிரிவுகளே யாகலானும், இவற்றைக் களவுக்கூட்டம் கற்புக்கூட்டம் என்பவற்றோடு ஒத்த தனிவேறு கூட்டங்கள்போலப் பிரித்தெண்ணுதல் பொருந்தாது. இவ்வாறு உட்பிரிவுகளையெல்லாம் எண்ணில், இயற்கை, இடந்தலைப்பாடு, பாங்கன் பாங்கிகளாலாவன. பகற்குறி, இரவுக்குறியாதிக்கூட்டங்களையெல்லாம் கூட்டியெண்ணல் வேண்டும். இவை பலவற்றை விலக்கிக் கூட்டமின்றிக் கூட்டநிமித்தமேயான உடன்போக்கைக் களவொடொப்பத் தனிவேறு பிரித்தெண்ணக் காரணமில்லை.

(2)  களவெனவே, அதனுட் பிரிவுகளெல்லாம் அடங்கும். உட்பிரிவுகள் அனைத்தையும் பிரித்து விலக்கியபின் களவென வொருதனி வேறு கூட்டங் கருதுதற்குமில்லை.

(3)  கற்பியல்பின் வேறாக விதந்து பிரித்து அக்கைகோளி னிலக்கணமெல்லாம் ஆண்டு விளக்கும் ஆசிரியர், இக்களவியல் முற்பகுதியில் களவுக்கேயுரிய நால்வகைப் புணர்வும், அவற்றின் நிமித்தங்களும், அவை களனாகத் தலைவன் கூற்று நிகழுமாறுங் கூறுமிவ்விடத்துக் கற்புக்கூட்டப் பாகுபாடு சிலவற்றை யிழுத்துப் பேசலானாரென, அக்குறிப்பை ஆசிரியர் சுட்டாதபோது, நாமவ்வாறு உரையிற்கொள்ள நியாயமில்லை.

(4)  “முதலொடு புணர்ந்த” என ஆசிரியர் தெளிசொற் கூறவும், அது குறிக்கும் நிலம் பொழுதெனும் இருமுதற்பொருள்களை விலக்கி, இங்குக் “கருப்பொருளொடு புணர்ந்த” என மாறுகூறுவதும் ஆசிரியர் கருத்திற்கிணங்குவதன்று.

(5)  இதில் “யாழோர்மேன . . . . . . . ஐந்நிலம் பெறும்” எனுந் தெளிசொற்களால் ஆசிரியர் களவுக்கைகோளுக்குரிய அன்பினைந்திணைகளையே கருதினரென்பதுதெளிவு. இவ்வாறு கொண்டால் தாம் கூறக்கருதிய பொருளொடு பொருந்தாதெனக்கண்டு, ஈண்டு ஐந்துங் கூட்டமேயாக அமைக்கவிரும்பி உரையாசிரியர் இடர்ப்படுகின்றார். ஐந்திணையாம் உரிப்பொருள்களில், குறிஞ்சித்திணையே கூட்டமாக, பிறதிணைகள் களவின்பத்தைச் சிறப்பிக்குங் கூட்டத்துணைத்திணைகளே யாதலால், அவையனைத்தும் ஐந்துகூட்டமெனக் கூறற்கில்லை. ஆனால், இதிலும் இதன் முன்னவையான இருசூத்திரங்களிலுமெண்ணப்பட்ட ஐந்தும் ஏழுமாகிய பன்னிரண்டும் பாங்கரைவேண்டுங் கூட்டமே யாகுமெனத் தாம்துணிந்தபடியால்,