| 432 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
சுட்டும் ஐந்நிலம் குறிஞ்சி முதலிய நிலப்பகுதிகளைக் குறியாதென்பது ஒருதலை. இனி, ஈண்டு ஐந்நிலம் களவின்பாற்படும் ஐந்திணையுமாகாவென ஈருரைகாரருந் துணிந்தது சரியே. முதலில் பாங்கர் நிமித்தம் பன்னிரண்டெனத் தொகுத்துப் பின் அவையாவன முன்னைய மூன்று பின்னர் நான்கு, யாழோர்மேன, ஐந்து எனவகுத்து ஆசிரியர் முறையே யீங்கு இச்சூத்திரங்களிற் சுட்டிப்போவதனால் அவர் கூறும் இப்பன்னிரண்டும் ஒரேதன்மையனவாதல் வேண்டும் என்பது தெளியக் கிடக்கின்றது. ஆகவே, அகத்திணை யேழேயாதலால், அவற்றுள் ஐந்திணை யிங்குப் பன்னிரண்டு நிமித்தங்களில் ஐந்தெனக்கூறின் மற்றையநிமித்தம் ஏழனுக்கும் ஒப்பப் பொருளுமமையாது. இங்கு ஆசிரியர் கூறும் பன்னிரண்டனுக்கும் ஒத்து அமையும் பொருள் காண்பதே முறையாகும். அதனை யினி யாராய்வாம். தாம் இங்கு இச்சூத்திரங்களால் வகுத்துக் கூறுவன பாங்கர் நிமித்தம் பன்னிரண்டென்பதை ஆசிரியர் இதற்குமுன் தொகுத்துக் கூறிய களவியல் 13ஆவது சூத்திரம் யாப்புறுத்துளது. அப்பன்னிரண்டும் களவில் தலைவன் கூற்று நிகழ்தற்கேதுவாகும். பலவற்றுள் பாங்கன்பாங்கிகளின்பாற் படுவனவேயாகும். அப்பாங்கர் நிமித்தம் பன்னிரண்டும், முன் மெய்தொட்டுப் பயிறல் முதலிய பலநிமித்தங்களும் தொகுத்துக்கூறும் 11ஆம் சூத்திரத்தில் விளக்கப்பட்டுள்ளன. இதனை, 13ஆம் சூத்திரக்கருத்தை மேலே நாம் ஆராய்ந்தபோது கண்டு தெளிந்தோம். அப்பன்னிரண்டும் அன்பினைந்திணைக் களவுக்காமேனும், அவற்றுள் முதல் மூன்று கைக்கிளைக்கும், பின் இறுதிநான்கு பெருந்திணைக்கும் வரற்பால நடுவணைந்து நிமித்தங்களும் இவ்விரு திணைக்கும் வாராது நடுவணைந்திணைக் காமக்கூட்டத்துக்கு மட்டுமே பொருந்துவனவாம். இதனையே ஆசிரியர் இங்கு இச்சூத்திரங்களால் விளங்கவைத்தார். இதனால் களவியல் பதினைந்தாவது சூத்திரத்தில் ஐந்நில மென்பது, முன் பதினோராவது சூத்திரத்தில் தலைவன் கூற்று நிகழுங் களம்பல கூறியவற்றுள் முதலெட்டு நீக்கிப் பின்கூறிய பாங்கர் நிமித்தமான பன்னிரண்டனுள் முதல் மூன்றும் இறுதிநான்கும் நீக்கி, இடை நின்ற ஐந்துகளனுமே யாகுமென்பது தெளிவாகும். |