பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை433

எனவே, இதற்கு முன்னைய பதினான்காம் சூத்திரம் கூறும் ஏழும், ஆசிரியர் முன் பதினொன்றாம் சூத்திரத்துள் விளக்கிய பாங்கர் நிமித்தம் பன்னிரண்டில் முதல் மூன்றும் இறுதி நான்கும் ஆக ஏழு களன்களாகும். இவ்வாறு இவையமைவதனை யினியிங்குச் சிறிது ஆராய்வாம்.

மேலே களவியற் பதின்மூன்றாஞ் சூத்திரப்பொருளை ஆராயுங்கால், அதிற் கூறப்படும் பாங்கர் நிமித்தம் பன்னிரண்டும், அதற்கு முன்னைய “மெய்தொட்டுப் பயிறல்” என்னும் பதினொன்றாம் சூத்திரத்துக் கூறப்படும் “பெற்றவழி மகிழ்ச்சி” முதல் “மடன்மாகூறு மிடனுமாருண்டே” என்பது வரை சொல்லப்படும் பன்னிரண்டேயாமெனக் கண்டுவைத்தோம். தலைவன் கூற்று நிகழ்தற்காம் நிமித்தம் இப்பன்னிரண்டனுள், முதல் நான்கு பாங்கன் கூட்டம், இறுதியெட்டும் பாங்கியிற் கூட்டமாவனவாம்.

அப்பன்னிரண்டு நிமித்தம் வருமாறு :

1.    பெற்றவழி மகிழ்ச்சி

2.    பிரிந்தவழிக் கலங்கல்

3   நிற்பவை நினைஇ நிகழ்பவை யுரைத்தல்

4.   ; குற்றங்காட்டிய வாயில்பெட்பு

5.    பெட்டவாயில் பெற்று இரவு வலியுறுப்பு

6.    ஊரும் பேருங் கெடுதியும் பிறவும்

    நீரிற் குறிப்பினிரம்பக் கூறித்

    தோழியைக் குறையுறும் பகுதி

7.    தோழி, குறையவட்சார்த்தி மெய்யுறக்கூறல்

8.    தண்டாதிரப்பு

9.    மற்றையவழி

10.    சொல்லவட் சார்த்தலிற் புல்லியவகை

11.    அறிந்தோளயர்ப்பின் அவ்வழி மருங்கிற் கேடும் பீடுங்கூறல்

12.    தோழி, நீக்கலினாகிய நிலைமை நோக்கி மடன்மாகூறல்.

இப் பன்னிரண்டே களவுக்கூட்டத்தில் தலைவன் கூற்றுக் கிடனாகும் பாங்கர் நிமித்தங்களாம். இவை தம்முள் முன்னின்ற

1.    பெற்றவழி மகிழ்தல்

2.    பிரிந்தவழிக் கலங்கல்

3.    நிற்பவை நினைஇ நிகழ்பவை யுரைத்தல்