பக்கம் எண் :

434நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

என்பவை மூன்றும், அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கில் காமக்கூட்டமாம் களவுநிமித்தமாவதுடன், அகப்புறமாகிய தூயசெந்திறக் கைக்கிளைத்திணைக்கு முரியனவாகத் தக்க குறி அல்லது நிமித்தங்களாயும் அமைவனவாம். இப்பன்னிரண்டனுள் பின்னிறுதி நின்ற இரந்து பின்னிற்றலை மாறுமிடத்துத் தலைவன்பால் நிகழும் வேறுணர்ச்சியைச் சுட்டும் ‘மற்றையவழி’ முதல் ‘மடன்மாகூறல்’ இறுதியான நான்கும் தூய காமக்கூட்டத்திற்கே யன்றிப் பொருந்தா இழிந்த காமமான நோந்திறப் பெருந்திணைக்கும் அடையாளம் அல்லது நிமித்தமாகவும் அமைவுறுவனவாம். இவ்வாறு முன் 3, பின் 4, ஆக இவை 7ம் போக, நடுவணின்ற 4ஆவதான “குற்றங்காட்டிய வாயில் பெட்பு” முதல் 8ஆவதான “தண்டாதிரப்பு” ஈறாகக் கூறப்பெற்ற ஐந்தும் கைக்கிளை பெருந்திணைகளுக்கு எவ்வாற்றானும் யாண்டும் பொருந்தாதனவாய் அன்பொடு புணர்ந்த நடுவணைந்திணைக் காமக்கூட்டமாங் கந்தருவத்திற்கே யுரிய நிமித்தங்களாகும். இதுவே தமிழ் மரபு. இவ்வுண்மையையே ஆசிரியர் இங்குத் தமிழ்க் களவிலக்கணங் கூறும் களவியலில் 11 முதல் 15 ஆவது வரையுள்ள சூத்தரங்களால் தெளிசொற் பெய்து விளக்கிப்போந்தார். இவ்வுண்மையை மறந்து நெகிழவிட்டு, வடநூலிற் காணப்படும் தமிழ் மரபாகாத கூட்டம் எட்டினை இவை குறிப்பதாகக் கொண்டதனால், உரைகாரர் இச்சூத்திரங்களுக்குச் செம்பொருள் கூறமாட்டாது மயங்கக் கூறலாயினர்.

சூத்திரம் : 31 
 முந்நா ளல்லது துணையின்று கழியாது;
அந்நா ளகத்தும் அதுவரை வின்றே.

இதன் பொருள் : முந்நாளல்லது துணையின்று கழியாது = களவுக்காலத்துத் தலைவி பூப்பால் புறம்பெயராமல் மனையகத்தடங்கி யொழுகும் மூன்றுநாட்களைத்தவிரப் பிறிதெந்நாளும் தலைவனும் தலைவியும் கூடாது கழிவதில்லை.

அந்நாளகத்தும் அதுவரைவின்றே = பூத்தகாலத்தும் கூட்டம் களவிற் கடியப்படுவதில்லை.


-*   இனிவருவன, நாவலர் பாரதியார், அவ்வப்போது ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாக எழுதப்பட்ட உரை விளக்கங்களாம்!