| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 435 |
இதுவே இச்சூத்திரச்சொற்றொடர் சுட்டும் செம்பொருளாகும். தொல்காப்பியர் கருத்தும் அதுவேயாதலால், அக்கருத்துக்கேற்ற சொற்கள் இச்சூத்திரத்தில் பெய்தமையானும், பின் கற்பியலில் “களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி, அலமரலுள்ளமொடளவியவிடத்தும், அந்தரத்தெழுதிய எழுத்தின்மான, வந்தகுற்றம் வழிகெட வொழுகலும்” என்று இவ்வாறு களவுக்காலத்தே காதல் மிகுதியால் நிகழ்ந்த தவறுகளை நீக்குதல் குறித்தமையானும், தெற்றெனவிளங்கும், இதற்குமாறாக உரைகாரர் கூறுவவனைத்தும் பொருந்தாமையை அவருரைக்குச் சூத்திரச் சொற்கள் இடந்தராமையொன்றே தெளிவிக்கும். | சூத்திரம் : 44 | | | | மறைந்த வொழுக்கத் தோரையு நாளும் துறந்த வொழுக்கங் கிழவோற் கில்லை. |
இதன் பொருள் : மறைந்தவொழுக்கத்து = களவொழுக்கத்திலே; ஓரையும் நாளும் துறந்தவொழுக்கம் = தனக்கியல்பான விளையாட்டுக்களையும் நாள்வேலைகளையும் துறந்து அனவரதம் காதலிலேயே அழுந்திக்கிடக்கும் வழக்கம்; கிழவோற்கில்லை = தலைவன்மாட்டுக் காணப்படுவ தொன்றன்று. எனவே களவில் தலைவிக்குத் தன் காதலன்றிப் பிறிதெதிலும் உளங்கொள்ளாமல் முழுதும் தன்னைக் காதலுக்கே கொடுத்துப் பிறவெல்லாவற்றையும் மறந்தொழுகுதலியல்பா மென்பதும், தலைவன் அவ்வாறன்றித் தன் தகுதிக்கேற்ற விளையாட்டுக்களை ஒழித்துவிடாமல் ஆடியும் நாள்தோறும் தனக்குரிய தொழிலாற்றியும் வருவதுடன் ஏற்றபெற்றியால் காலமிடங்கருதிக் காதலின்பத்தையும் துய்ப்பானாவான் என்பதும், உலகியல் கருதி இச்சூத்திரம் கூறுகின்றது. ஓரை = விளையாட்டென்பது, சங்க இலக்கியமுழுதும் அச்சொல்லுக்கு அப்பொருளாட்சி யுண்மையால் விளங்கும். ஓரைக்கு ‘இராசி’ அல்லது ‘முகூர்த்தம்’ எனும் பொருளுண்மைக்குத் தொல்காப்பியத்திலேனும் சங்க இலக்கியம் எதனிலேனும் சான்று காணுதலரிது. மிகவகன்ற பிற்காலப்புலவர் சிலர் முகூர்த்தம் (அதாவது ஒருநாளினுள் நன்மை தீமைகளுக்குரியதாகப் பிரித்துக்கொள்ளப்படும் உட்பிரிவு) என்றபொருளில் இச்சொல்லைப், பிரயோகிக்கலானார். அக்கொள்கைக்கே சான்றில்லாத சங்க |