பக்கம் எண் :

436நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

இலக்கியத்தில், ‘ஓரை’யென்னும் தனித்தமிழ்ச்சொல்லுக்கு, அக்காலத்தி லக்கியங்களால் அதற்குரிய பொருளாகக் காணப் பெறும் விளையாட்டையே அச்சொல் குறிப்பதாகக் கொள்ளுவதே முறையாகும். அதைவிட்டுப் பிற்கால ஆசிரியர் கொள்கையான இராசி அல்லது முகூர்த்தம் எனும்பொருளை இத்தமிழ்ச் சொல்லுக்கு ஏற்றுவதே தவறாகும். அதற்குமேல் அச்சொல்லைக் கொண்டு தொல்காப்பியம் அடையப் பிற்காலத்து நூலென்று வாதிப்பது அறிவுக்கும் ஆராய்ச்சி யறத்திற்கும் பொருந்தாது. அடையின்றி ‘ஓரை’ என்பதற்கு முகூர்த்தமென்று பொருள் கொண்டால், நல்ல நேரத்தைக் குறிப்பதன்றித் தீய இராசியைக் குறிப்பதாகக் கொள்ளுதல் பொருந்தாது, ஒழுக்கமென்னுஞ் சொல்லைப்போலவே முகூர்த்தமும் தன்னளவில் நல்லதையே குறிக்கும் ஆகலான்.

கற்பியல்

சூத்திரம் : 31 
 பின்முறை யாகிய பெரும்பொருள் வதுவைத்
தொன்முறை மனைவி எதிர்ப்பா டாயினு
மின்னிழைப் புதல்வனை வாயில்கொண்டு புகினும்
இறந்த துணைய கிழவோ னாங்கட்
கலங்கலு முரிய னென்மனார் புலவர்

இதன் பொருள் : பின்முறையாகிய பெரும்பொருள் = வரைவிற்குப் பின் தலைவியைத் தணக்கப் போதிய பெருமையுடைத்தாகத் தலைவன் கருதிச்செய்த பொருளை; (148) வதுவைத் தொன்முறை மனைவி எதிர்ப்பாடாயினும் = மணந்து கற்புங்காமமும் நற்பாலொழுக்கமுமாய தொன்முறையுடைய மனைவிக்கெதிர்கொண்டு புகுங்காலும்,

அல்லது அன்ன நன்மனையாள்தன்னிற் பொருளைப் பெரிதாக்கித் தற்பிரிந்து தேடிய பொருளொடு மீளும் தலைவனைச் சினவாது (பிரிதற்கு முன் நடந்தபடியே நடந்து) தொல்லைக் கற்புறுகாம நற்பாலொழுக்க முறையில் எதிர்ப்படுவாளாயினும் எனலுமாம்.