| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 437 |
மின்னிழைப் புதல்வனை வாயில்கொண்டு புகினும் = பரத்தைமையால் பிரிந்த தலைவன் தன் தவறஞ்சி மகனை வாயிலாகக் கொண்டுபுகினும்; இறந்த துணைய கிழவோன் = தன் பிரிவுக்காலத்துத் தலைவிக்குத்தான் காதலறங்கடந்த அளவினனாய தலைவன். அதாவது, தவறிழைத்த வாழ்க்கைத் துணையாய தலைவன். ஆங்கண் கலங்கலுமுரியன் = அவ்வாறு பிரிந்து மீண்டு தலைவியை எதிர்ப்படுமிடத்து அவட்குத்தானிழைத்த தவறு நினைத்துக் கலங்கலுமுரியன். உம்மையால் கலக்கங்காட்டாமல் தன் காதல் நிறைவுகூறித் தலைவியைத் தேற்றவும் ஊடல்தீர்க்கவும் முயலுவதே தலைவனின் பெரும் இயல்பென்பது விளங்கும். இச்சூத்திரத்திற்கு இதுவே ஆசிரியர் கருத்தாம் என்பது, முன் கற்பியல் 9ஆம் சூத்திரத்துப் ‘பெரும்பொருள்’ எனும் தொடரை இப்பொருளிலேயே தொல்காப்பியர் பெய்தமைத்தபெற்றி வலியுறுத்தும். “பெறலரும் பெரும்பொருள் முடிந்தபின்வந்த” என்ற சூத்திரமுதலடிக்கு இளம்பூரணர் இவ்வுரையே கூறுவதும் கருதற்பாலது. அவர் ஆங்குத்தரும்பொருளாவது : “பெறுதற்கரிய பெரும்பொருளை முடித்தபின்னர்த் தோன்றிய தெறுதற்கரிய மரபு காரணத்தால் தலைவனைச் சிறப்பித்துக் கூறுமிடத்தும் தோழி கூற்று நிகழும், என்றவாறு. ”இவ்வாறு உரியபொருள் கூறியதோடமையாது, “பெரும்பொருள், ஈண்டு, வரைவிற்கேற்றது; தேறுதல், சுழலநோக்குதல்” என விசேடவுரையும் கூறி, “பெரும்பொருள்” என்னும் தொல்காப்பியத் தொடருக்கு அத்தொடர்ச் சொற்கள் சுட்டும் நேரியபொருளைத் தெள்ளத் தெளித்துப் போந்தார். அதே சூத்திரத்தில், பின் “சீருடைப் பெரும்பொருள் வைத்த வழி, மறப்பினும்” எனவருமடியும் கவனிக்கத்தக்கது. ஆண்டும், வரைந்துகொண்டு வாழும் தலைவன் இல்வாழ்க்கை இனிது நடத்தற்குவேண்டிப் பெரும்பொருள் தேடுவதைப் பெரிதாகத் தன் மனத்தில் கொண்டபொழுது, அது காரணமாகத் தலைவியுடனுறையும் காதற்கடனைத் தலைவன்மறந்து பிரிவுக் குறிப்பைத் தோற்றுவிப்பினும் தோழிகூற்று நிகழும், என்பதே |