பக்கம் எண் :

438நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

இவ்வடிக்கு இனிது பொருந்தும் செவ்விய பொருளாகும். முதலடிக்குச் செம்பொருள் கூறிய இளம்பூரணர் இப்பின்னடிக்கு அதைமறந்து, ‘பெரும்பொருள்’ என்பதற்குரிய செம்பொருளை விட்டு, இத்தொடரை இலக்கணையாக ‘இற்கிழமை’யைக் குறிக்கும் என்றெழுதலானார். அதைக் கொழுகொம்பாக்கி, முதலடியில் வரும் இத்தொடரையும் ஆகுபெயராக்கிப் ‘பெரும்பொருள் என்பதற்கு ‘வதுவை’ எனப்பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர் அவரே, பிந்திய அடிக்குத் “தலையாய இல்லறத்தைத் தலைவிமாட்டு வைத்த காலத்துத் தலைவன் அறஞ்செய்தற்கும் பொருள் செய்தற்கும் இசையும் கூத்துமாகிய இன்பம் நுகர்தற்கும் தலைவியை மறந்து ஒழுகினும்” என வுரைகூறினார். இலக்கண நூலில் ஒரு சொல்லையோ தொடரையோ பலவிடங்களில் பலவேறு பொருளில் பெய்துபோவது இலக்கணநூலார் முறையன்று. அது அறிவுக்கும் ஆட்சிமரபுக்கும் மாறான தவறாகும் சூத்திரம், மற்றைப்பாட்டுப்போலாது, திரிசொல் முதலிய மயக்கச் சொற்களைவிலக்கி, எளிய இயற்சொற்களால் சொற்சுட்டும் செம்பொருள் கற்பார்க்குக் கண்டளவே தோன்றுமாறு அமைதலே முறை. தொல்காப்பியரே,

“அவற்றுட், சூத்திரந் தானே,

ஆடி நிழலி னறியத் தோன்றி
நாடுத லின்றிப் பொருணனி விளங்க
யாப்பினுட் டோன்ற யாத்தமைப் பதுவே”

எனச் சூத்திர இலக்கணம் கூறுபவர், அவ்விலக்கணத்துக்கு மாறாகத் தானே பல சூத்திரங்களில் ஒரேதொடரைப் பல வேறுபொருளிற்பெய்து மயங்கவைப்பாரா? ஒருகாலுமில்லை பிறிது கருத்தைச் சுட்டாவிடத்தெல்லாம் சூத்திரச்சொற்றொடர் சுட்டும் செம்பொருளே ஆசிரியர் கருத்தாகக்கொள்ளுதல் கற்போர்கடன், ஆகையால் கற்பியல் 9ஆம் சூத்திரத்திலீரிடத்தும், 31ஆம் சூத்திரத்திலோரிடத்தும் வரும் ‘பெரும் பொருள்’ எனும் சொற்றொடர் அம்மூவிடத்தும் “பெரிதாகிய பொருள்” என்பதையே குறித்தல் வேண்டும். முன்னையதான 9ஆம் சூத்திரத்தில், முதலடியில், வரைவின்பொருட்டு வரைவுக்குமுன் பொருள் செய்யச் சென்ற தலைவன், பொருளைச் செய்துமுடித்து, வரைதற்கு வந்தபொழுது, அப்பொருட்பொருட்டுச் சிறுகாலையவன் தலைவியைப்பிரிந்ததற்கு வெகுண்டுதெறாமல், வரைதற்கு வந்த மகிழ்ச்சிமலிந்து