| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 439 |
தோழிக்குக்கூற்றுநிகழுமென்பது, கூறப்பட்டது, அதேசூத்திரத்தில் பிந்திய அடியில், வரைந்துவாழும் தலைவன் வரைந்தபின் இல்லறமினிது நடத்தற்பொருட்டுப் பொருள்தேட நினைத்துத் தலைவிக்குரிய தன் காதற்கடனை மறப்பானாகக் கண்டதோழிக்குக் கூற்று நிகழ்வதை ஆசிரியர் சுட்டுகின்றார். இவ்விருவகைப்பொருட்பிரிவையு மிதிற்கூறிய ஆசிரியர், இவற்றுள் முன்னதான வரைவுக்கு முன்பொருளாக்கியதை விலக்கி, வரைந்தொழுகும் தலைவன் கற்பொழுக்க முடைய தலைவியை மறந்து பிரியுங்குறிப்புக் காட்டிய பொழுது தோழி கூறுவதையுமிங்குக்கூறிப், பின் 31ஆம் சூத்திரத்தில் அவ்வாறு இல்லறத்திற்கு வேண்டியபொருட்குப் பிரிந்த கணவன், பொருளொடு மீளுபவன், தான் தணந்துவைத்த தலைவியை அப்பொருளொடு எதிர்ப்படுங்கால் தன் நெஞ்சில் கலக்கங்கொள்ளுமிடத்தை விளக்குகின்றார். இதனால், ஈண்டு“பின்முறை ஆக்கிய பெரும்பொருள்” என்பது, “வரைந்தபின் தலைவன்செய்யும் பொருளெ”ன்பதைத் தெளிக்கவந்த தொடரெனத் தெளிதலெளிதாம். இனி, இச்சூத்திரத்தில் நச்சினார்க்கினியர் சில பாடபேதங் கொள்ளுகிறார். அவர் பாடமும் சூத்திரப்பொருளை மாற்றற்குரியதன்று. முதலடியில் ‘ஆகிய’ என்ற இளம்பூரணர் பாடத்தை ‘ஆக்கிய’ என மாற்றிக்கொள்ளுவர் நச்சினார்க்கினியர். எதுபாடமாயினும், வரைவுக்குப்பின் முறையாகத் தலைவன்செய்த பெரும்பொருளையே சுட்டுவதாகும். முறையாகத் தலைவன்செய்த பெரும்பொருளையே சுட்டுவதாகும். நச்சினார்க்கினியர் பாடத்தில், இச்சூத்திரத்தின் 4ஆவது அடியிற் பெரியதொரு மாறுதல் காணப்படுகிறது. “இறந்த துணையகிழவோனாங்கண்” என்ற இளம்பூரணர் பாடத்தை அறவேமாற்றி, “கிழவோன் இறந்தது நினைஇ ஆங்கண்” எனப் புதிதொரு பாடங்கொண்டனர் நச்சினார்க்கினியர். தமக்கு முந்திய உரையாசிரியர் பாடத்தைச் சுட்டாமலே புறக்கணித்துத் தாம் புதுப்பாடங் கொண்டதற்கேற்ற ஆதாரத்தையும் விளக்கினாரில்லை. அதன் முறையை ஈண்டாராய்தற்கவசியமில்லையாதலால், அதை விட்டு, நச்சினார்க்கினியர் பாடத்தால் சூத்திரக்கருத்து வேறுபட்டதா என்பதை மட்டும் நோக்குவோம். இவர் பாடமும், “பிரிந்து மீண்டதலைவன், கழிந்த தன்தவறு நினைந்து, அம்மீட்சிக் காலத்துக் கலங்குவதுமுண்டு” என்பதையே கூறுதலால், இச்சூத்திரத்திற்கு ஆசிரியர் கொண்ட கருத்து மேலே நாம் தெளித்துக் கூறியதே யாகுமென்பது வலியுறுகின்றது. |