பக்கம் எண் :

46நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

ஐயமும், அச்சமும் தெளிந்து மகிழ்தலும் ஒருங்காணக்கிடக்கின்றன.

முதலில் அவள்கருத் தறியாமையா லவன் அஞ்சுவது அச்சமகற்று மவள் அளிநோக்கும், அதன்மேலிருவமறிவுடம்பட் டுள்ளம்புணர்ந்துழி அவனவள் நலம் பாராட்டலும் ஆகிய மூன்றுமினிது விளங்கும். “கூற்றமோ” என்றதாலச்சமும் “கண்ணோ” என்றதால் கண்ணோடுமவள் காதல் நோக்கும் “பிணையோ” என்றதால் அறிவுடம்பட் டுளங்கலந்துழி அவனவளைப் பாராட்டலும் இனிதமையச் சிறுகுறளிற் செறித்த செவ்வி வியத்தற்குரித்து.

“அணங்குகொல், ஆய்மயில் கொல்லோ கனங்குழை
 மாதர்கொல் மாலுமென் னெஞ்சு”

என்பதிலும், “அணங்கா”லையவச்சமும், “மாதர் என்பதாலறிவுடம்பாட்டுத் தெளிவும், “மயில்” என்பதால் பாராட்டு மொருங்கமைதலறிக.

“மயில்கொல், மடவாள்கொல், மாநீர்த் திரையுட்
 பயில்வதோர் தெய்வங்கொல் கேளீர் குயில்பயிருங்
 கன்னி யிளஞாழற் பூம்பொழில் நோக்கிய
 கண்ணின் வருத்துமென் னெஞ்சு”

(திணைமொழி. 49)

இத்திணைமொழி வெண்பாவும், நெய்தனிலத்துக் “கலந்தபொழுதும் காட்சியுமாய” உரிப்பொருள்களின் மயக்கம் கூறுகிறது.

சூத்திரம் : 17 
 முதலெனப் படுவ தாயிரு வகைத்தே.

கருத்து : இஃது, உரிப்பொருள் கருப்பொருள்கள் போல விலக்குகள் வேண்டி விரியாமல், முதற்பொருள் நிலம்பொழுதிரண்டினுள் அடங்குமென்பதை வலியுறுத்தல் நுதலிற்று.

பொருள் : முதலெனப்படுவது = முதற்பொருள் என்று சிறப்பித்துக் கூறப்படுவது; ஆயிருவகைத்தே = மேலே நாலாவது