| 48 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
| சூத்திரம் : 18 | | | | தெய்வ முணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவுங் கருவென மொழிப. |
கருத்து : இது முதல் உரிப்பொருள்களில் அடங்காவாய் அகத்திணைக்கு உறுப்பாம் கருப்பொருள்வகை உணர்த்துகிறது. பொருள் : தெய்வம் = வழிபடு கடவுட்பகுதி; உணாவே = ஊண்வகை; மா = விலங்குவகை; மரம் = மரஞ்செடிகொடி வகை; புள் = பறவை வகை; பறை = அவ்வந்நிலங்களுக்குரிய பறைவகைகள்; செய்தி = தொழில்வகை; யாழின் பகுதியொடு தொகைஇ = யாழ் வகைகளோடு கூட்டி; அவ்வகை பிறவும் = அவைபோல அகத்திணைகளுக்குச் சார்பாக வகைப்படுவன மற்றையனவும்; கருஎனமொழிப = கருப்பொருள்கள் என்று கூறுவர் அகப்பொருணூலார். குறிப்பு : முன்னைச் சூத்திரக் குறிப்புரையில் சுட்டியாங்கு, முதலும் உரியுமல்லாத அகப்பொருள்களுள் அகத்திணைக்குக் கருவாய் அமைவன யாவும் கருப்பொருள்கள் என்பர் அகப்பொருள் நூலார். இச்சூத்திரத்தில் அளவற்ற கருப்பொருள்வகைக ளனைத்தையும் வகுத்து நிறுத்தல் கூடாமையின், சிறந்தன சில சுட்டி அவ்வகை பிறவும் கரு என்று கூறி, மொழிந்த பொருளோடொன்ற அவ்வயின் மொழியாததனையும் முட்டின்று முடியவைத்தார் தொல்காப்பியர். | சூத்திரம் : 19 | | | | எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும் வந்த நிலத்தின் பயத்த வாகும். |
கருத்து : இது கருப்பொருண் மயக்கமும் கடிதலில்லை யென்பது கூறுகின்றது. பொருள் : எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் = எந்த நிலச்சார்பில் கூறப்படும் பூ, புள் முதலிய கருப்பொருள்களும்; அந்நிலம் பொழுதொடு வாராவாயினும் = அவ்வக் கருப்பொருட்குச் |