| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 49 |
சிறந்துரிய நிலத்தோடும் பொழுதோடும் இயைந்து வந்திலவாயினும்; வந்த நிலத்தின் பயத்த ஆகும் = கூறப்பட்ட ஒழுக்கநிக ழிடத்தொடு பொருந்த அதற்கேற்ற பயன் தருவனவாய் அமையும். குறிப்பு : பூவும் புள்ளும் என்பவற்றுள் உம்மை எண்ணுமை. வாராவாயினும் என்பதிலும்மை யெதிர் மறை சுட்டும்; கருப்பொருள்கள் பெரும்பாலும் தத் தமக்குரிய நிலம் பொழுதொடு இயைந்து வருதலே சிறந்த முறை, ஒரோவிடத்து மாறிவரினும் வந்த இடத்தொடு பொருந்தப் பயன் தருவதால் கடியப்படாமல் அமைத்துக் கொள்ளப்படும் எனும் பொருட்டாதலின். உரிப்பொருள்களைப் போலவே கருப்பொருள்களும் முதற் பொருள்களான நிலம்பொழுதுகளின் வகைகளில் இயைபுநோக்கி ஏற்றபெற்றி ஒரோவொன்றிற்கே சிறப்புரிமையுடன் பொருந்துவனவாகும். நிலம்பொழுது வகைகளின் பொருத்தம் நோக்கி அவ்வவற்றிற்குரிய கருப்பொருள்களமையக் கூறுவதே பெருவழக்காம். எனினும், ஒரோவிடத்து நிலம்பொழுதுகளுக்கு நேருரிமையல்லாத திணைக்குரிய வொழுக்கங்கள் மயங்கக்கூறுவது புலனெறி வழக்கென்று மேலே 12, 13ஆவது சூத்திரங்கள் கூறினதால், அவ்விடங்களில் தம்முளியைபின்றி மாறுபட்ட முதலுரிப் பொருள்களில் எதற்கியையக் கருப்பொருள்களின் அமைவு கருதப்படுமென்ற ஐயம் எழுவதியல்பு. அவ்வையமகற்ற ஈண்டு இச்சூத்திரம் எழுந்தது. நிலம் பொழுதுகளோடு பொருந்தக் கருப்பொருள் கூறுவது பெருவழக்கிற்றாயினும், பயன்நோக்கி அகத்திணையிற் சிறந்த ஒழுக்கங்களுக்கியைய நலந்தருவனவற்றை அமைத்துக் கோடல் பாடல்சான்ற புலனெறிவழக்கேயாம் என்பதை இச்சூத்திரம் வலியுறுத்துகிறது. “பாடலுட் பயின்றவை நாடுங்காலை” முதலிற் கருவும் கருவில் உரியுமே முறை சிறந்தன எனுந் தமிழ்மரபை முன் மூன்றாஞ் சூத்திரத்துக் கூறினராதலின், நிலம்பொழுதுகளிலும் சிறந்த உரிப்பொருளொழுக்கத்திற்குப் பொருந்தவரும் கருப்பொருள்கள் முதற்பொருளுக்கியையாவிடத்தும் கடியப்படா என்று இதனால் இந்நூலார் அமைவுகாட்டி வற்புறுத்தினார். “மாயோன்மேய” எனும் முன்னைச் சூத்திரத்தில் நானிலங்கள் முறையே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் |