பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை53

வருணவகைபற்றிய சூத்திரங்கள் இடைச் செருகல் என்பது பிறாண்டு விளக்கப்படும்.

“யாயும் ஞாயும் யாரா கியரோ?
 எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
 யானும் நீயும் எவ்வழி யறிதும்?
 செம்புலப் பெயல்நீர் போல
 அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே”.

என்னும் குறுந்தொகை (40ஆம்) பாட்டானும் பிறப்பு தொழில்வகை கருதாமல் ஒத்த அன்பே மணத்திற்குப் போதியது என்னுந் தமிழ்மரபு விளக்கமாகும்.

நானிலத் தமிழ்மக்களும் தம்முள் வேறுபாடின்றி மணந்துகொள்ளும் பழைய வழக்குண்மை, சாதி வெறியலைக்கும் பிற்காலக் கோவைகளும் பலநில மக்களின் கலப்புமணம் குறித்துத் தமிழ்மரபு வழுவாமல் அகத்துறைகளமைத்துக் கூறுவதாலும் வலுபெறுகின்றது.

“கழைகோடு வில்லியைச் செற்றார் தியாகர் கமலைவெற்பின்
 உழைகோடி சுற்றுங் கிரியெம தூரும தூர்மருதம்;
 தழைகோடி கொண்டு சமைத்ததெம் மாடை தனித்தனியோ?
 இழைகோடி பொன்பெறு மேயும தாடை யிறையவரே”.

(எல்லப்பநாயினார் திருவாரூர்க் கோவை. செய். 101)

இவ்வுண்மையை மறந்து தொல்காப்பியர் நூலின் உரைகாரர் இப்பண்டைத் தமிழிலக்கண (நூற்) சூத்திரத்திற்கு, அவர்கால இயைபற்ற புராணக் கதைகளையும் இயல்வழக்கற்ற ஆரியக் கொள்கைகளையும் புகுத்திப், பொருந்தாப் புத்துரைகள் கூறி மயங்கவைத்தார். ஆரியருள் நான்கு வருணத்தாருக்குமே தமிழரின் அகத்திணைக் களவியல் ஒழுக்க ஆட்சியுரிமை அவர் தம் தரும சாத்திரங்களிலும் வழக்கிலும் இன்மையானும், ஆரிய தரும நூல்கள்கூறும் உயர்பிறப் புரிமையுடைய இடையிருவணத்தார் தமிழகத்தென்று மில்லாமையானும், இவருரைகள் பொருந்தாமையறிக. அன்றியும், தமிழிலக்கண நூல் “. . . . வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பில் நாற்பெயரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழியது” எனத் தொல்காப்பியர் தாமும், “வட வேங்கடந் தென்குமரியாயிடைத் தமிழ்கூறும்