பக்கம் எண் :

56நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

வரையகச் சிறுதினைச் செவ்வாய்ப் பாசினம் கடியும் கொடிச்சி”யைத் தலைமகளாக்கும் நற்றிணை (134ஆம்) பாட்டும்,

இன்னும் இதுவேபோல் பல பழம்பாட்டுக்களும் பிறப்பாற் சிறப்பெதுவுமில்லாத ஆயர், குறவர், நுளையர் முதலிய யாரும் காதற்றலைமக்க ளாதற்குரியர் என்பதைத் தெளிவாக்கும்:

1. “பாங்கரும் பாட்டங்காற் கன்றொடு செல்வோம். எம்
 தாம்பி னொருதலை பற்றினை, ஈங்கெம்மை
 முன்னைநின் றாங்கே விலக்கிய எல்லா! நீ
 என் ஏமுற்றாய்?விடு.
 விடேன், தொடீஇய செல்வார்த் துமித்தெதிர்மண்டும்
 கடுவய நாகுபோ னோக்கிக் கொடுமையா
 நீங்கிச் சினவுவாய் மற்று.
  . . . . . . . . . . . . . . . .
 கலத்தொடியாஞ் செல்வுழி நாடிப் புலத்தும்
 வருவையா னாணிலி நீ”
 (முல்லைக்கலி16)
2.“கடிகொள் ளிருங்காப்பிற் புல்லினத் தாயர்
 குடிதொறும் நல்லாரை வேண்டுதி, எல்லா!
 இடுதேள் மருந்தோ நின்வேட்கை? தொடுதரத்
 துன்னித்தந் தாங்கே நகைகுறித் தெம்மைத்
 திளைத்தற் கெளியமாக் கண்டை, அளைக்கெளியள்
 வெண்ணெய்க்கும் அன்னளெனக் கொண்டாய்;
                                                                 ஒண்ணுதால்!
 ஆங்குநீ கூறி னனைத்தாக; நீங்குக.
 . . . . . . . . . . . . . . . . . .
 நின்றாயநீ சென்றி, எமர்காண்பர்; நாளைஎங்
 கன்றொடு சேறும் புலத்து. ”
 (முல்லைக்கலி - 10)
3.“யாரிவன் என்னை விலக்குவான்?நீருளர்
 பூந்தா மரைப்போது தந்த விரவுத்தார்க்
 கல்லாப் பொதுவனை! நீமாறு, நின்னொடு
 சொல்லல் ஓம்பென்றார் எமர்”.
 (முல்லைக்கலி - 12)