பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை57

இவற்றால் முல்லைநிலத்தில் ஆயர்அகவொழுக்கத் தலைமக்களாதற் குரியரென்பது தெளிவு.

“சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக்
 கொலைவில் எயினர் தங்கை நின்முலைய
 சுணங்கென நினைதி நீயே;
 அணங்கென நினையுமென் னணங்குறு நெஞ்சே”

(ஐந்குறு. 363)

என்னும் ஐங்குறு நூற்றுப்பாட்டால், முல்லைநிலத்தில் வேட்டுவத்தொழிலுடைய எயினர் தங்கை தலைமகளாதலறிக.

இனி, “என்னுள் வருதியோ நன்னடைக் கொடிச்சி” என்னும் நற்றிணை 82ஆம் பாட்டில்வரும் அம்மள்ளனார் செய்யுளடியும்,

“உறுகழை நிவப்பிற் சிறுகுடிப் பெயரும்
 கொடிச்சி செல்புறம் நோக்கி
 விடுத்த நெஞ்சம் விடலொல் லாதே”.

என்னும் நற்றிணை 204ஆம் பாட்டில் மள்ளனார் கூறும் அடிகளும் குறிஞ்சிக் குறத்தி தலைமகளாதற்கு மேற்கோள். அவ்வாறே,

“மீனெறி பரதவர் மடமகள்
 மானமர் நோக்கங் காணா வூங்கே”

என்னும் வெள்ளியந்தின்னனார் நற்றிணை 101ஆம் பாட்டடிகளும்,

“முடிமுதிர் பரதவர் மடமொழிக் குறுமகள்
 . . . . . . . . . . . . . . . .
 கொலைவெஞ் சிறாஅர் பாற்பட் டனளே”

என்னும் நற்றிணை 207ஆம் பாட்டடிகளும் நெய்தற் பரத்தி தலைமகளாதற்கு மேற்கோளாம்.

இவ்வாறு, தமிழருள் யாரும் காதற்றலைமக்களாய் அகத்திணைக்கு உரிமைகொள்வர் என்பதைச் சுட்டுதற்காகவே,