| 58 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
‘ஆவயின் வரூஉங் கிழவரு முளரே’ என்று இதில் இந்நூலார் அமைவுபெறக்கூறித் தெளியவைத்தார். “பெருநீர் விளையுளெஞ் சிறுநல் வாழ்க்கை நும்மொடு புரைவதோ அன்றே; எம்ம னோரிற் செம்மலு முடைத்தே”, (நற்றிணை. 45) என்று ‘உணக்கல் வேண்டி யினப்புள்ளோப்பும் புலவுநாறும்’ பரதவர் மகளைக் கிளவித்தலைவியாகக் கூறும் நற்றிணையடிகளானும் இவ்வுண்மையறிக. | சூத்திரம் : 22 | | | | ஏனோர் மருங்கினு மெண்ணுங் காலை ஆனா வகைய திணைநிலைப் பெயரே. |
கருத்து : இது, மேற் சூத்திரத்திற் கூறிய முல்லை நிலம் ஒழியப், பிறநில மக்களின் திணைநிலைப் பெயர்களும் அவ்வாறே யமையும் என்பது கூறுகின்றது. பொருள் : எண்ணுங்காலை = ஆராயும் பொழுது; ஏனோர் மருங்கினும் = (மேற்கூறிய ஆயர் வேட்டுவரென்னும் முல்லைநில மக்கள் தவிரப்) பிறநிலமக்கள்பாலும்; திணைநிலைப்பெயர் ஆனாவகைய = அவர்க்குரிய அகத்திணைக்குரிப் பெயர்கள் சுருங்கக் கூறியமையாப் பல திறப்பட்டனவாகும். குறிப்பு : ஈற்றேகாரம் அசை, ஏனோர்மருங்கினும் என்பதிலும்மை, முன் ஆயர் வேட்டுவரொப்ப : வரல்லாப் பிறநில மக்களிடத்தும் என்னும் பொருட்டாதலால், எச்ச வும்மையாகும். நிலம்பற்றியும் தொழில்பற்றியும் தமிழ்மக்கள் கொள்ளும்பெயர் பலவாதலானும், அவ்வாறு வேறுபடும் பெயர்க்குரியர் யாவரும் அகப்பகுதியில் எல்லாத்திணைகளிலும் கிழவராதற் குரியராதலானும், திணைக்குரிய அன்னோர் பெயர்கள் கூறியமையா ஆதலின் ‘ஆனாவகைய திணைநிலைப்பெயர்’ என்று இங்குக் கூறப்பட்டது. |