| 60 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
எனும் திணைமாலை வெண்பாவிலும் சங்கு குளிப்பாரின் தங்கை தலைமகளாவதறிக. (3) (அ) மருதநில மக்கள் தலைவராதலை, | (அ) | “தொண்டி யன்ன என்னலந் தந்து கொண்டனை சென்மோ மகிழ்ந நின்சூளே” | | | (குறுந். 238) |
எனுங்குன்றியன் குறும்பாட்டிற் காண்க. அன்றியும், | (ஆ) | “மேகந்தோய் சாந்தம் விசைதிமிசு காழகி னாகந்தோய் நாக மெனவிவற்றைப் போக எறிந்துழுவார் தங்கை யிருந்தடங்கண் கண்டு மறிந்துழல்வா னோவிம் மலை” (28 திணைமாலை. 150) |
எனும் வெண்பாவில் நிலந்திருத்தி உழுவாரின் பெண் தலைமகளாதலறிக. | சூத்திரம் : 23 | அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரை யிலபுறத் தென்மனார் புலவர். |
கருத்து : இஃது, மேற்கூறியாங்கு நானிலமக்களே யன்றிப் பிற ஏழை மக்களும் அகத்திணைக் குரிமைகொள்வார் என்று கூறுகிறது. பொருள் : புறத்து = மேற்கூறிய நானிலமக்களின் திணைப்பெயர் வகுப்புக்களிலடங்காத; அடியோர் பாங்கினும் = பிறர்க்கடிமையாவாரிடத்தும்; வினைவலர் பாங்கினும் = அடிமையரல்லாக் கம்மியர் போன்ற தொழிலாளரிடத்தும்; கடிவரையில் = அகத்திணை யொழுக்கங்களை நாட்டிச் செய்யுட்செய்தல் விலக்கில்லை; என்மனார் புலவர் = என்பார் பொருள்நூல் வல்லார். குறிப்பு : ஈரிடத்தும், “பாங்கினும்”, எனவரும் உம்மைகள், முன்னைச் சூத்திரங்கள் கூறுந் திணைமக்களொப்ப என |