| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 63 |
நாமுசாஅம்; கோனடி தொட்டேன்; ஆங்காக; சாயலின் மார்ப அடங்கினேன், ஏஎ பேயும் பேயுந் துள்ள லூறுமெனக் கோயிலுட் கண்டார் நகாமை வேண்டுவல், கண்டாய் தகடுருவ! வேறாகக் காவின்கீழ் போதர கடாரப் புல்லி முயங்குவேம்” (போதரகடார = போதரு+அகடார. ) என வருதலால், தலைமக்கள், தம்முரியராகரப் பிறரடியராதல் தெளிக. 2. இனி வினைவலர் தலைமக்களாதற்குச் செய்யுள்: “காராரப் பெய்த கடிகொள்வியன் புலத்து” (கலி. 109) என்னு முல்லைக்கலியில், “இவடான், திருந்தாச் சுமட்டினள், ஏனைத்தோள்வீசி வரிக்கூழை வட்டிதழீஇ, அரிக்குழை யாடற்றகையள்”என வருதலால், இதிற் றலைமக்கள் வினைவலராதலறிக. இன்னும் “கடிகொளிருங்காப்பில்” (கலி. 110) “பாங்கரும் பாட்டங்கால்” (கலி. 116) “யாரிவன் என்னை விலக்குவான்” (கலி. 112) என்னுங் கலிப்பாக்களும் வினைவலர் பாங்கினும் அகஒழுக்கம் கடிவரையின்மை குறிப்பனவாகும். “பெருங்கட லுள்கலங்க நுண்வலை வீசி ஒருங்குடன் தன்னைமார் தந்த - கொழுமீன் உணங்கல் புள்ளோப்பும் ஒளியிழை மாதர் அணங்காகு மாற்ற வெமக்கு” (ஐந்திணை ஐம்பது. 47) எனு மாறன்பொறையனார் வெண்பாவும் வினைவலர் காதலுரிமை குறிப்பதறிக. | சூத்திரம் : 24 | ஏவன் மரபி னேனோரு முரியர் ஆகிய நிலைமை யவரு மன்னர். |
கருத்து : இதுவும் அகப்பகுதியில் நானிலமக்களேயன்றி, திணைப்பெயர்க்குரிமை கொள்வாரின்னுஞ் சிலருளர் என்பது கூறுகின்றது. |