பக்கம் எண் :

64நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

பொருள் : ஏவன் மரபின் ஏனோரும் = ஒருவரிடத்தடைந்து அவர் குற்றேவல் செய்வதையே மரபாகவுடைய (அடியாரும் வினைவலருமல்லாத) பிறரும்; உரியர் = நானில மக்களைப் போலவே அகத்திணைக்குரிமையுடையவராவர்; ஆகிய நிலைமையவரும் = அவ்வாறு ஒருவரையுமடையாமல் நாள்தோறும் ஏவுவார் தொழில் ஏற்பதாகிய நிலைமையுடையோரும்; அன்னர் = (அடைந்தாட்படும் குற்றேவல் மக்களைப் போலவே) அகத்திணைக் குரிமையுடையராவர்.

குறிப்பு : ‘ஏனோரும்’ ‘நிலைமையவரும்’ என்பவற்றினும்மைகள் முன்னர்க் கூறியவரைக் குறித்து நிற்கும் இறந்தது தழீஇய எச்சவும்மைகளாம். இதற்கும் கைக்கிளை பெருந்திணைகளை யிழுத்துப் புகுத்திக் கூறும் உரைகாரர் பழையவுரை பொருந்தாதென்பதை மேற்சூத்திரத்துக்குக் கூறிய குறிப்புக்களைக் கொண்டுதெளிக.

ஏவன்மரபு என்பது, குற்றேவற்றொழில் புரிவார் சிறியநிலை குறிக்குமல்லால், பிறரை ஏவும் பெருவாழ்வுரிமை குறியாது: ஏவுதல் மரபென்னாது ஆசிரியர் ஏவன் மரபு என்றாராதலின். ஏவலர், ஆட்பட்ட அடிமைகளின் வேறாவர். ஆகவே, அடிமையாய் ஆட்பட்ட அடியார் வேறு; அடிமைப்படாமல் ஒருவரையடுத்து அவர்க்கே குற்றேவல் செய்து வாழும் ஏவலர் வேறு; ஒருவரையுமடையாமல் நாள்தோறும் வேண்டுவோர்க்கு அவரேவிய செய்து வாழ்வாராய ஏனையோர் வேறு. இம்மூவருள் அடங்காராய்க் கம்மியர் போன்ற ஏவலரல்லாத் தொழிலாளரான வினைவலர் வேறு. ஆதலின் இந்நால்வரையும் முறையே ஆசிரியர் இச்சூத்திரங்களில் நானிலமக்கள் போலவே அகவொழுக்கத்திற் குரிமையுடையரென்று விதந்து கூறினார்.

“அறப்பரிசாரமும் . . . . உரிமைச்சுற்றமோ டொருதனிப் புணர்க்க”எனுமனையறம்படுத்த காதையடிகள் தமிழ்த்தனிக்குடி மக்களின்கீழ் ஏவலரும் அடிமைத்திரளும் வெவ்வேறாதலை விளக்குகிறது. பரிசாரம், ஏவற்றொழில்; ஈண்டது புரிபவருக்கு ஆகுபெயர் உரிமைச் சுற்றம், அடிமைத்திரள் என்றே சிலப்பதிகார உரைகாரரிருவரும் கூறுதலறிக. “குற்றிளையோரும் அடியோர் பாங்கும்” எனும் கொலைக்களக்காதை யடிகளும் பெருங்குடிதோறும் குற்றேவல் புரிவோரும் அடிமைகளும் உண்மையை உறுதிப்படுத்துகின்றது. இனி, இந்திரவிழவூரெடுத்த காதையில்