பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை71

(i) உயர்ந்தார் காவற்பொருட்டுப் பிரிதற்குப் பாட்டு.

1. “பல்வரி யினவண்டு புதிதுண்ணும் பருவத்துத்
 தொல்கவின் றொலைந்தவென் றடமென்றோ ளுள்ளுவார்
 ஒல்குபு நிழல்சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி
 வெல்புக ழுலகேத்த விருந்துநாட் டுறைபவர்;
2. திசைதிசை தேனார்க்குந் திருமருத முன்றுறை
வசைதீர்ந்த வென்னலம் வாடுவ தருளுவார்
நசைகொண்டு தந்நிழல் சேர்ந்தாரைத் தாங்கித்த
மிசைபரந் துலகேத்த வேதினாட் டுறைபவர்;
3. அறல்சாஅய் பொழுதோடெம் மணிநுதல் வேறாகித்
திறல்சான்ற பெருவனப் பிழப்பதை யருளுவார்
ஊறஞ்சி நிழல்சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி
யாறின்றிப் பொருள்வெஃகி யகன்றநாட் டுறைபவர்”
 (கலி. 26)

(ii) அவர் பொருள்வயிற்பிரிதற்கு தாரணம் : -

1. “அருஞ்சுரக் கவலை நீந்தி என்றும்
 இல்லோர்க் கில்லென் றியைவது காத்தல்
 வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும்
 பொருளே, காதலர் காதல்;
 அருளே காதலர் என்றி, நீயே”
 (சீத்தலைச் சாத்தனார், அகம். 53)

“வெயில்வீற றிருந்த வெம்மலை யருஞ்சுரம்
 ஏகுவ ரென்ப தாமே தம்வயின்
 இரந்தோர் மாற்றல் ஆற்றா
 இல்லின் வாழ்க்கை வல்லா தோரே”

(நற்றிணை. 84)

சூத்திரம் : 29மேலோர் முறைமை நால்வர்க்கு முரித்தே.

கருத்து : இது, வேந்தர்க்கும் வேந்தரொடு சிவணிய சிறப்பின் ஏனோர்க்கும் உரிய பிரிவெல்லாம் அடியோர் கீழோரல்லா நானிலமக்களனைவர்க்கும் உரியவென் றுணர்த்துகின்றது.