பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை73

பார்ப்பனரென்றும் பொருள்கொள்ளின், மேலோரெனப்படுவார் யாவரேயாயினும் அவரை நீக்கியபின் அவரொழிந்த வருண வகுப்பினர் நால்வராதல் கூடாமை வெளிப்படை. அதுவுமன்றி, ஆரியர் அறநூல்கள் கூறும் பிறப்புரிமைகளுடைய இடையிருவருணத்தார் என்றும் தமிழகத்து இல்லாமையானும், தொல்காப்பியர் தமிழ் மரபுகளையும் தமிழர் வழக்குகளையுமே தாம் கூறுவதாக வற்புறுத்துவதானும், அவ்வுரை தொல்காப்பியர் கருத்தன்றென்பது தேற்றமாகும்.

(i) பொருள்வயிற் பிரிவுக்குப் பாட்டு :

1. “வேய்மருள் பணைத்தோள் நெகிழச் சேய்நாட்டுப்
 பொலங்கல வெறுங்கை தருமார். . . . . . . . . .
 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
 சுரம்புல்லென்ற ஆற்ற. . . . . காடிறந் தோரே”
 (மாமூலனார், அகம். 1)
2. “நட்டோ ராக்கம் வேண்டியும் ஒட்டிய
 நின்றோள் அணிபெற வரற்கும்
 அன்றோ தோழி யவர்சென்ற திறமே”
 (பாலங்கொற்றனார், நற்றிணை. 286)
2. “ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச்
 செய்வினை கைம்மிக வெண்ணுதி, அவ்வினைக்
 கம்மா வரிவையும் வருமோ,
 வெம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே”
 (உகாய்குடிகிழார், குறுந்தொகை. 63)

ii. தூதுப்பிரிவுக்குச் செய்யுள் : -

(1)“மிகைதணித் தற்கரி தாமிரு வேந்தர்வெம் போர்மிடைந்த
  பகைதணித் தற்குப் படர்தலுற்றார் நமர், பல்பிறவித்
  தொகைதணித் தற்கென்னை யாண்டுகொண்டோன்
 
றில்லைச் சூழ்பொழில்வாய்
  முகைதணித்தற் கரிதாம் புரிதாழ்தரு மொய்குழலே”
 
(திருச்சிற்றம்பலக்கோவையார்)
 
(2)“இகலுமிரு வேந்தர்க் கிடையமரின் தீமை
 அகலப் பொருத்த அகன்றார் நகையாமே