| 74 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
காமப் பகைதணியக் கற்பின் மனைபொருந்தி ஏம மெமக்கீயா தின்று. | சூத்திரம் : 30 | மன்னர் பாங்கிற் பின்னோ ராகுப உயர்ந்தோர்க் குரிய ஓத்தி னான. |
கருத்து : இது, மன்னரைப் பொருந்திச் சிறந்த வேந்தன் கிளைஞர் ஏனாதியர் முதலிய மேலோர்க்கு மேல்27, 28ஆம் சூத்திரங்களில் கூறிய பகை, காவல், பொருள்பற்றி ஒழியப் பிற பிரிவுகள் கூறும் ஒழிபுச் சூத்திரமாகும். பொருள் : உயர்ந்தோர்க்குரிய = அடியோர் முதலிய கீழோரல்லாத சிறப்புடையோர் செய்தற்குப் பொருந்திய; ஓத்தின் ஆன = கல்வியான் ஆம் பிரிவுவகை அனைத்துக்கும்; மன்னர் பாங்கிற் பின்னோர் ஆகுப = மன்னர் சார்பில் அவரொடு சிவணிப் பின்னிற்போர் உரியராவர். குறிப்பு : பிரிவைந்தனுள் பொருளும் போரும் எல்லார்க்கும் பொது. ஓதலும் தூதும் அடியார் முதலிய கீழோரை விலக்கி மற்ற நானில மேன்மக்களுக்குரிய என்பதை மேல் 25, 26ஆம் சூத்திரங்கள் கூறின. நாடு காவற்பிரிவு மன்னரொடு சேர்ந்து சிறந்தார்க்குரித்தென 28ஆம் சூத்திரமும், அக்காவற்பிரிவு நானில மேன்மக்களுக்குமுரித்தென 29ஆம் சூத்திரமும் மொழிந்தன. இனி, மன்னரொடு சிவணிச் சிறந்த மேலோர், மன்னர் பொருட்டுப் பகைமேற்கொண்டு பிரிதல் மேல் 27ஆம் சூத்திரத்திலும், காவலும் பொருளும் பற்றிப் பிரிதல் 28ஆம் சூத்திரத்திலும் கூறப்பெற்றன வாதலின், அம்மூன்று மொழியத், தூது முதலிய பிறவுயர்ந்தோர் வினை பற்றிய பிரிவனைத்தும், மன்னர் பாங்கிற் பின்னோராய அன்னவர்க்குரித்தாம் என்பதை இவ்வொழிபுச் சூத்திரத்தில் இந்நூலார் கூறினார். “அன்பு அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க் கின்றயமையாத மூன்று” என்பது வாய்மொழி. அதனால், மதிநுட்பம் நூலோடுடைய உயர்ந்தோர்க்கன்றி மற்றையோர்க்குத் தூது போல்வன கூடாமை ஈண்டு விளக்கப்பட்டது. |