பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை75

இவ்வாறன்றி, இதனை இரண்டு சூத்திரமாகப் பிரித்துப் பிற வுரையாசிரியர்கள் கூறும் பொருள்கள் இந்நூலாரைக் கூறியது கூறும் குற்றத்திற் காட்படுத்தும்.

‘மன்னர் பாங்கிற் பின்னோ ராகுப’ எனத் தனியே பிரித்து, அதற்குப் பிறர் கூறும் உரை மேலே 27, 28, 29ஆம் சூத்திரங்களில் இந்நூலார் கூறியவற்றுள் அடங்குதலின், அஃதவர் கருத்தன்மையறிக. அதுவே போல், ‘உயர்ந்தோர்க்குரிய ஓத்தினான’ என்பதைத் தனிச்சூத்திரமாக்கிப் பிறர் கூறும் பொருள், முன், ‘ஓதலுந் தூது முயர்ந்தோர் மேன’ என்னும் சூத்திரங் கூறுவதிலடங்குமாதலின், அதுவும் அமைவதன்று. ஏடெழுதுவோரால் இவை பிரித்தெழுதப்பெற்று அதனால் பின் உரையாசிரியர்கள் தனிவேறு சூத்திரங்களாகக் கருதிமயங்கி, இந்நூலாசிரியரின் முன்சூத்திரப் பொருளொடு பொருந்தாவாறு மாறுபடவுரை கூறியுள்ளார். அன்றியும், இரண்டாய்ப் பிரிப்பின், இரண்டும் பொருள் முடிபின்றிப் பொலிவிழக்கும்.

சூத்திரம் : 31வேந்துவினை யியற்கை வேந்தனி னொரீஇய
ஏனொர் மருங்கினு மெய்திட னுடைத்தே.

கருத்து : இது, முடியுடை வேந்தரல்லாத குறுநில மன்னர்க்குப் பிரிவுவகை கூறுகின்றது.

பொருள் : வேந்துவினையியற்கை = முடிமன்னரின் பிரிவுக்குரிய வினையியல்பு; வேந்தனின் ஒரீஇய = அவ்வேந்தரின் வேறாய; ஏனோர் மருங்கினும் = பிறவேளிர் முதலான குறுநில மன்னரிடத்தும்; எய்திடனுடைத்தே = பொருந்துதல் உரித்தாகும்.

குறிப்பு : ஈற்றேகாரம் அசை.

குறுநில மன்னர் பிறநாடு கொள்ளப் போர்மேற் செல்லும் பிரிவுக்குப் பாட்டு;

“விலங்கிடுஞ் சிமையக் குன்றத் தும்பர்
 வேறுபல் மொழிய தேஎம் முன்னி
 வினைநசைஇப் பரிக்கும் உரன்மலி நெஞ்சமொடு
 புனைமாண் எஃகம் வலவயி னேந்திச்