பக்கம் எண் :

78நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

குறிப்பு : வழக்கம் என்பது செல்லுதற்பொருட்டாதல் “ஆள்வழக்கற்ற சுரத்திடை” (அகம். 51) என்ற பெருந்தேவனார் அகப்பாட்டடியாலும், ‘யாவரும் வழங்குந ரின்மையின்’ என்னும் மாமூலர் அகப்பாட்டடியானும், “மான்றமாலை வழங்குநர்ச் செகீஇய, புலிபார்த்துறையும் புல்லதர்ச் சிறுநெறி” என்னும் பூதனார் நற்றிணைப் பாட்டடியானும், ‘வளிவழங்கும்’ என்னும் குறளடியானுமறிக.

இனி, ‘முந்நீர்’ என்பது கடலுக்கு இயற்பெயராதல் வெளிப்படையாகவும், அச்செம்பொருளை விட்டு, மூன்று நீர்மையாற் செல்லுஞ்செலவு என்று பொருள் கூறும் நச்சினார்க்கினியர் உரை எவ்வகையானும் பொருந்துவதன்று. அவர் கூறுமாறு ஓதல், தூது, பொருள் காரணமாக மட்டும் தலைவன் தலைவியை உடன்கொண்டு செல்லுதல் கடியப்படுமெனின், மற்றும் பகை காவல் முதலியவற்றில் தலைவியோடு கூடச் சேறல் உண்டு எனக்கொள்ளல் வேண்டும். ஓதல் தூது பொருள்பற்றித் தலைவியை உடன்கொண்டு செல்லுதலினும், பகை பிறநாடுகாவல் பற்றிய செலவுகளில் அவளைக் கொண்டு செல்லுதலால் வரும் ஏதம் பெரிதாகலானும், பின் கற்பியலில் “எண்ணரும் பாசறைப் பெண்ணொடும் புணரார்” எனப் பாசறையில் பெண்ணொடு சேறல் கடியப்படுதலானும், அவ்வாறு போர் காவல்களில் தலைவியொடு செல்லும் வழக்குண்மை சான்றோர் செய்யுட்களில்யாண்டும் பயிலாமையானும், அவ்வுரை சூத்திரக் கருத்தன்மை தேற்றமாகும்.

இனி, ஓதல், பகை, தூது, பொருள், காவல் அனைத்தும் பிரிவுவகைகளே யாதலானும், பிரிவு தலைமக்கள் தம்முள் பிரிதலையே குறிக்குமாதலானும், இப்பிரிவைந்தனுள் எதுபற்றியுந் தலைமகன் தலைவியுடன் செல்லுமாறில்லையென்பது தேற்றம். அதனாலும் நச்சினார்க்கினியர் கூறும்பொருள் இந்நூலார் கருத்தாகாமை பெறப்படும்.

பின், இச்சூத்திரம் கூறுவது யாதெனின், அன்பினைந்திணை களுளெதனினு மடங்காதனவும், அகவொழுக்கத்திற்கு உரிப்பொருளாயமை வனவுமான களவில் உடன்போக்கும், கற்பில் ஏற்புழி மனைவியுடன் சேறலும் தமிழ் மரபென்பதும், அவ்வாறு செல்லுங்கால் பெண்டிரொடு கடல் கடத்தல்