பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை79

மரபன்றென்பதுமேயாம். இவற்றுள் முன்னது ‘கொண்டுதலைக் கழியினும்’ என்னும் இவ்வியல் 15ஆம் சூத்திரத்தானும், பின்னது ‘மரபு நிலைதிரியா’ என்னும் இவ்வியல் 45ஆம் சூத்திரத்தானும் அமையும்.

(i)   களவில், கொண்டுதலைக்கழிதலுக்குச் செய்யுள் :

“அழிவில முயலு மார்வ மாக்கள்
 வழிபடு தெய்வங் கட்கண் டாஅங்
 கலமரல் வருத்தந் தீர யாழ . . . . . . . . .
 . . . . . . . . . . . . . . . . . .
 நிழல்காண் டோறும் நெடிய வைகி
 மணல்காண் டோறும் வண்டல் தைஇ
 வருந்தா தேகுமதி, வாலெயிற் றோயே.
 மாநனை கொழுதி மகிழ்குயி லாலும்
 நறுந்தண் பொழில கானம்
 குறும்பல் லூரயாஞ் செல்லு மாறே”

(பாலைபாடிய பெருங்கடுங்கோ, நற்றிணை. 9)

(ii)   கற்பில், தன்னை உடன்கொண்டு செல்லக் கொழுநனை

மனைவி வேண்டற்குச் செய்யுள் :

“தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரம்
 கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றால்
 என்னீ ரறியாதீர் போல விவைகூறி
 னின்னீர வல்ல நெடுந்தகாய் எம்மையும்
 அன்பறச் சூழாதே ஆற்றிடை, நும்மொடு
 துன்பந் துணையாக நாடி னதுவல்ல
 தின்பமு முண்டோ வெமக்கு”

(பாலைக்கலி. 6)

சூத்திரம் : 34எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேற்
பொற்புடை நெறிமை யின்மை யான.

கருத்து : இது, மகளிர்க்கு மடலேற விரும்புதலும் முறையன்று என விலக்குதல் நுதலிற்று. இதுவும் பெண்ணியல்