| 82 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
மடலேறிப் பறை அறைவேனெனல், நாணொடு நிறையைப் பூணாகக் கொண்ட பெண்டகைமைக்கு முற்றிலும் இயைபற்றதாகும். இதனாலன்றோ, “காமத் திணையிற் கண்ணின்று வரூஉம் நாணும் மடனும் பெண்மைய, ஆதலின் குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை நெறிப்பட வாரா அவள்வயி னான” எனுங் களவியற் (17) சூத்திரத்தால் தொல்காப்பியர், களவில் தலைவியரிடம் கடலன்ன காமவேட்கை குறிப்பானன்றி நெறிப்படாமையையும், அவ்வாறு நெறிப்படின் அது பொற்புடைமை ஆகாமையையும் வற்புறுத்தினார். இத்தமிழ் மரபுக்கு மாறாக, “கடலன்ன காமத்த ராயினும் பெண்டிர் மடலூரார் மைந்தர்மே லென்ப- மடலூர்தல் காட்டுகேன் வம்மின் கலிவஞ்சி யார்கோமான் காட்டுகேன் வம்மின் கலிவஞ்சி யார்கோமான் வேட்டமா மேற்கொண்ட போழ்து” என நச்சினார்க்கினியர் உரையில் மேற்கோள் காட்டினாராலெனின், பண்டைநன் மரபுக்கு மாறாகப், பெண்டிரெல்லாரும் யாண்டும், எந்நிலையிலும், ஆடவரெழிலுக்கு உடையுமுள்ளத்தினர் எனக்கூறும் உலா, மடல் முதலிய பனுவல் எழுந்த தகுதியும் மரபும் தலைதடுமாறிய பிற்கால வழக்கென மறுக்க. | சூத்திரம் : 35 | | | | “தன்னும் அவனும் அவளுஞ் சுட்டி மன்னு நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம் நன்மை தீமை அச்சம் சார்தலென்று அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ முன்னிய காலம் மூன்றுடன் விளக்கித் தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும் போகிய திறத்து நற்றாய் புலம்பலும் ஆகிய கிளவியும் அவ்வழி உரிய” |
|